பொள்ளாச்சி: மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் - தீக்குளித்து உயிரிழந்தார்!
கோவை: பொள்ளாச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மற்றொரு சிறுமி தீக்குளித்து உயிரிழந்தார்.
பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி வைகை நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவரை இளங்கோ கார்த்திக் (24) என்பவர் மே 31-ம் தேதி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இளங்கோ கார்த்திக்கின் பெற்றோரிடம் கூறிய போது, இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அந்த சிறுமி தீக்குளித்தார்.
பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று இறந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலம், அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் இளங்கோ கார்த்திக், தந்தை குணசேகரன், தாயார் லதா, உறவினர் ராஜலட்சுமி ஆகியோரை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸார் ஏற்கனவே கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமி இறந்ததையடுத்து 4 பேர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக கூடுதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications