For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் மிதுன் சக்கரவர்த்தி நடத்தி வந்த பள்ளி மூடப்படுகிறது!

By Shankar
Google Oneindia Tamil News

கோவை: கோவையில் அரசு அனுமதியின்றி நடைபெற்று வந்த மிதுன் சக்கரவர்த்தியின் பிரபல பள்ளி வரும் ஏப்ரலில் மூடப்படுகிறது.

எண்பது தொன்னூறுகளின் பிரபல இந்திப் பட நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். டெல்லி மேல்சபை எம்.பி.யாகவும் இருக்கிறார். ஊட்டி இவருக்கு மிகப் பிடித்த இடம் என்பதால், அங்கு ஹோட்டல் கட்டினார். தன் ஷூட்டிங்குகளையும் இங்குதான் நடத்துவார்.

கோவையை அடுத்த துடியலூர் குருடம்பாளையத்தில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான மோனார்க் சர்வதேச பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

Mithun Chakraborthy's Coimbatore school to be shut down in April

இங்கு நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த 10 வருடங்களாக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.

கல்வி துறையிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த பள்ளி நடத்தப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சர்வதேச பள்ளி கல்வித் துறையில் உரிய அனுமதி பெறாமல் செயல்படுவது உண்மை எனத் தெரிய வந்தது.

‘உரிய அனுமதி பெறாமல் செயல்படும் உங்கள் பள்ளியை ஏன் மூட நடவடிக்கை எடுக்கக்கூடாது'? என்று விளக்கம் கேட்டு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு பள்ளி நிர்வாகம் ‘வருகிற ஏப்ரல் மாதத்துடன் பள்ளியை மூடத் திட்டமிட்டிருப்பதாகக் தெரிவித்ததாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.

English summary
An international school owned by actor turned politician Mithun Chakraborthy near Coimbatore will be shut down this April due to violations of govt rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X