இதோ ஒன்றரை லட்சம் பேர் இருக்காங்க!.. அவங்களையெல்லாம் நீக்குவார்களா?- திமுகவுக்கு அழகிரி கேள்வி
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமே எனது நோக்கம் என்றும் இன்று வந்த ஒன்றரை லட்சம் ஆதரவாளர்களையும் திமுக நீக்கிவிடுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி மரணமடைந்த சில நாட்களில் கட்சி மற்றும் குடும்ப ரீதியாக அழகிரி பிரச்சினைகளை எழுப்பினார். திடீரென கருணாநிதியின் சமாதிக்கு வந்த அழகிரி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பேன் என்றும் எனது பலத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தும் அமைதி பேரணி மூலம் ஒரு லட்சம் பேரை அழைத்து வந்து நிரூபிப்பேன் என சவால் விடுத்தார்.

பேரணி தொடக்கம்
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து தனது பேரணியை தொடங்கினார்.

அழகிரி பேட்டி
சுமார் 2 மணி நேரங்கள் கழித்து கருணாநிதியின் சமாதியை அடைந்தார். அங்கு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தந்தை கருணாநிதியின் 30-ஆவது நினைவு நாளையொட்டி அமைதி பேரணி நடத்தப்பட்டது.

நன்றி
இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த பேரணியில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய ஊடகங்கள், காவல் துறையினருக்கும் நன்றி என தெரிவித்தார்.

கேட்டு சொல்லுங்கள்
இதையடுத்து தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கட்சி நிர்வாகி ரவியை திமுக நீக்கியுள்ளதே அது குறித்து தங்கள் கருத்து என்ன செய்தியாளர்கள் வினவினர். அதற்கு அவர் இங்கு எனக்கு ஆதரவாக ஒன்றரை லட்சம் பேர் வந்துள்ளார்கள். அவர்களை எல்லாம் நீக்குவார்களா என கேட்டு சொல்லுங்கள் என்றார்.

பரபரப்பு
இன்று தனது ஆதங்கத்தை சொல்வேன் என்று அழகிரி முன்னரே கூறியிருந்ததால் ஏதேனும் பரபரப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெறும் நன்றி அறிவிப்பு பேரணியாக மாறியதில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications