எடப்பாடி பழனிசாமி காற்றுப்போன பலூன்! அதிமுக மாஜி அமைச்சர்கள் தப்ப முடியாது! ஸ்டாலின் உறுதி!
சென்னை: வீராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து, காற்று போன பலூனாக திரும்பி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு புதிது கிடையாது என முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்,
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் நிச்சயம் நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்வில் ஸ்டாலின் பேசியிருப்பதாவது;
கேள்வி: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், பல்வேறு திட்டங்களிலும் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் நிலை என்ன?
பதில்: கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! அ.தி.மு.க.வின் கரெப்ஷன் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது. ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில், இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டியுள்ளது.

அந்த அடிப்படையில் விசாரணை நிறைவடைந்து - கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அது உறுதி!
கேள்வி: டெல்லிக்குப் சென்றதும் எடப்பாடி பழனிசாமியின் வீரியம் அடங்கிவிட்டதைப் பார்த்து என்ன தோன்றியது?
பதில்: வீராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து, காற்று போன பலூனாக திரும்பி வருவது அவருக்கோ, அவர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் புதிதில்லையே.












Click it and Unblock the Notifications