தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காமல் அவமதித்த காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. விஜயேந்திரரின் செயலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அதுவும் ஆளுநருக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது கண்டனத்துக்குரியது.
விஜயேந்திரர் தவறை மறைக்கவே தியானம் என தவறான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தாயை அவமானப்படுத்தியவதாகவே கருதப்படுகிறது. தியானம் நடத்துவது அவரவர் விருப்பம். ஆனால் தேசிய கீதம் பாடும்போது மட்டும் எழுந்து நின்றது எப்படி. தேசத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜேயந்திரர் எழுந்து நின்றார்.












Click it and Unblock the Notifications