நீண்ட நாளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்த்த மு.க.ஸ்டாலின்! செம பாராட்டு
டெல்லி: நீண்ட நாட்களுக்கு பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தியேட்டரில் ஒரு சினிமா பார்த்துள்ளார். அந்த படத்தை பாராட்டி புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்துள்ளதாவது: 'பரியேறும் பெருமாள்' பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம்.

[ஆளுநரே சொல்லியாச்சி.. முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள்.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி]
பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான மாரி செல்வராஜ் படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல 'பரியன்கள்' தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்!
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுடன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், திரைப்படத்தை கண்டு ரசித்தார்.
‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்! pic.twitter.com/DQb7MpFhGZ
— M.K.Stalin (@mkstalin) October 6, 2018


Click it and Unblock the Notifications
