மாம்பழம் விற்கும் பாட்டியும்.. மு.க.ஸ்டாலினும்.. என்ன பேசியிருப்பாங்க.. பிரச்சார களத்தில் கலகல!

திருப்பரங்குன்றத்தில் முக ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பரங்குன்றம்: மாம்பழம் விற்கும் பாட்டியுடன் முக ஸ்டாலின் என்னதான் பேசியிருப்பாரு? என்பதுதான் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் ஆர்வமே!

இத்தனை நாள் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒட்டப்பிடாரத்தில் திண்ணை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு வீடு பாக்கி இல்லாமல், அவங்க வீட்டு திண்ணையில் உட்கார்ந்து அவர்களிடம் சகஜமாக பேசினார்.

MK Stalin is campaining in Thiruparankundram Constitution

குறிப்பாக, பாட்டிகளும், குழந்தைகளும் முக ஸ்டாலினிடம் ஏராளமான அன்பை பொழிந்தார்கள். இப்போது ஒட்டப்பிடாரத்தை முடித்து கொண்டு, திருப்பரங்குன்றம் சென்றுள்ளார் ஸ்டாலின். அங்கு வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது சாலை, வீதிகள், வீடுகள் என மக்களை சந்தித்து நலம் விசாரித்து இயல்பாக பேசிவருகிறார். இப்படித்தான் ரோட்டோரம் ஒரு பாட்டி மாம்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் வேர்க்கடலையும் குவித்து வைத்துள்ளார்.

அவரிடம் ஸ்டாலின் போய் நின்றதும், இரு கைகளையும் குவித்து பாட்டி வணக்கம் வைக்கிறார். அவரிடம் குனிந்து ஏதோ பேசுகிறார் ஸ்டாலின். வாக்கு சேகரித்தாரா? நலம் விசாரித்தாரா? மாம்பழம் வாங்கினாரா? என்று தெரியவில்லை. இந்த புகைப்படம் திமுகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில், "கழக தலைவர் @mkstalin அவர்கள், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் டாக்டர். சரவணன் அவர்களை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வணிகர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை.. பாட்டி மாம்பழம் நம்ம சின்னம் கிடையாது.. மெஷின்ல அதைத் தேடிட்டிருக்காதீங்க.. பார்த்துக் கவனமா ஓட்டுப் போடுங்கன்னு.. சொல்லியிருப்பாரோ ஸ்டாலின்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+