2ஜி தீர்ப்பால் கருணாநிதி மகிழ்ச்சி!... கோபாலபுரத்தில் ஸ்டாலின் நெகிழ்ச்சி!!
2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியுடன் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
சென்னை : 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியாகி கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கோபாலபுர இல்லத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதி மகிழ்ச்சியாக உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வழங்கினார்.

இதையடுத்து திமுகவினர் உற்சாகமடைந்தனர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிலையில் மறைந்த சற்குணபாண்டியன் வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பதவியை கனிமொழிக்கு வழங்குவது குறித்து பொதுச் செயலாளர் க.அன்பழகனுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2ஜி தீர்ப்பு குறித்து நானும் பேராசிரியர் அன்பழகனும் கருணாநிதிக்கு எடுத்துரைத்தோம். 2ஜி தீர்ப்பால் கருணாநிதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

என் கையை பிடித்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அநீதி வீழ்ந்துள்ளது, அறம் வென்றுள்ளது என்பதே இந்த தீர்ப்பின் சாராம்சம் ஆகும். ஆர்கே நகருக்கும் 2ஜி தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்றார் ஸ்டாலின்.
2ஜி வழக்கிலிருந்து கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் கருணாநிதி, அநீதி வீழ்ந்தது, அறம் வென்றது என்று எழுதி காட்டியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications