அன்பு வாக்காளர்களே... வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு கேட்கும் மு.க.ஸ்டாலின்
ஆர்கே நகரில் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
சென்னை: ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர் , அமைச்சர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதுபோல் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனிடையே திமுக ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரிக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் அன்பார்ந்த ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களே, உங்களில் ஒருவரான முக ஸ்டாலின் விடுக்கும் அன்பு வேண்டுகோள், அனைத்து நிலைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி, லஞ்ச, ஊழலை மட்டும் முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கும் குதிரை பேர அதிமுக அரசை விரைந்து மாற்றுவதற்காக ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த இடைத்தேர்தல் களம் இருக்கட்டும். எப்போதும் உங்களுடன் இருக்கும் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நன்றி... வணக்கம்.. என்று அந்த ஆடியோவில் உள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications