ஜெ. படத்தை சட்டசபையில் திறப்பது அரசியல் சட்டவிரோதம்: ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்- வீடியோ

  சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது அரசியல் சட்டவிரோதம் என சாடியுள்ளார் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

  இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

  முறைகேடு செய்து சொத்து குவித்த வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா. ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அந்த தீர்ப்பு வழங்கப்பட்டபோது உயிருடன் இல்லாத காரணத்தால்தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.

  MK Stalin says Opening Jayalalitha's photo is against to law

  ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. குற்றவாளியின் படத்தை சட்டசபையில் திறக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை.

  ஜெயலலிதாவின் படத்தை திறந்து சட்டசபை மாண்பை குலைக்கக் கூடாது. சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டால் வரலாற்றில் அது கருப்பு நாளாக அமையும்.

  மக்களாட்சி மாண்புகளை குழிதோண்டி புதைக்க சபாநாயகர் தயாராகிவிட்டார். சட்டசபை மாண்பை இழிவுபடுத்தும் வகையிலான ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்வை சபாநாயகர் கைவிட வேண்டும்.

  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK Working President MK Stalin says opening of Jayalalitha's photo in assembly is against to law. As she was No 1 accused in DA case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற