ஏப் 12-ல் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருப்பு உடை அணிந்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம்- ஸ்டாலின்
ஏப்ரல் 12-ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: ஏப்ரல் 12-ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திருச்சியில் உள்ள முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை நேற்று ஸ்டாலின் தொடங்கினார்.
இன்று இரண்டாவது நாளாக தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையிலிருந்து புறப்பட்டார் ஸ்டாலின். அப்போது அவர் கூறுகையில் பெண்கள் 4 பேர் இருந்தால் சத்தம் இருக்கும், குழப்பம் இருக்கும்; இங்கு அதிகமான பெண்கள் அமர்ந்து இருந்தும் கட்டுப்பாட்டோடு இருப்பதை பார்க்கும்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.

வெற்றி போராட்டம்
பொது கூட்டத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வந்திருப்பது இந்த ஆட்சியை அகற்றுவதற்காக தான் என்பதை உணர்த்துகிறது. காவிரிக்காக அனைத்து அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்; இது வெற்றி போராட்டமாகியது.

கருப்பு கொடி
இந்த பயணம் அரசியல் பிரசார பயணமல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எள்ளளவும் மத்திய அரசு முயற்சி செய்யவில்லை. தமிழகத்திற்கு வரும் 12-ஆம் தேதி வருகை தரும் பிரதமர் ஹெலிகாப்டரில் பயணித்தாலும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும்.

கருப்பு கொடி
மோடி தமிழகத்துக்கு வரும் நாளில் அனைவரும் கருப்பு உடை அணிவோம். மேலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை.
|
ஆயுள் முழுவதும் சிறை
காவிரி பிரச்னைக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை கண்டு அஞ்சவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு கைதான எங்களை சிறையில் வைக்க இடம் இல்லாததால் மாலையே விடுவித்தனர் என்றார் ஸ்டாலின்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications