எமர்ஜென்சியை பார்த்தே அஞ்சாத திமுக மோடி பூச்சாண்டிக்கு பயப்படாது: மு.க.ஸ்டாலின் பதிலடி!!
கடலூர்: இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியைப் பார்த்தே அஞ்சாத திமுக மோடி பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படாது என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்
சென்னையில் நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் திமுக- அதிமுகவை முதல் முறையாக கடுமையாக தாக்கி பேசினார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. மோடியின் இந்தப் பேச்சுக்கு நேற்று இரவே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் நந்தகோபால கிருஷ்ணனை ஆதரித்து பெண்ணாடம் பகுதியில் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பேசியதாவது:

சென்னையில் உரையாற்றிய மோடி திமுக தமிழகத்திற்க்காக எதுவும் செய்யவில்லை என்று ஒரு பொய் பிரசாரத்தை செய்துள்ளார். இந்த வாரம் ஜூ,வி பத்திரிக்கையில் ஹியுமன் டெவலப்மெண்ட் இண்டஸ்டிரி இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்ளை சர்வே எடுத்துள்ளார்கள்.
11வது இடத்தில் குஜராத்- தற்கொலைகள்
அவர்களின் சர்வேயின் படி மோடி முதல்வராய் இருக்கும் குஜராத் மாநிலம் எத்தனையாவது இடம் தெரியுமா 11 வது இடம்.. அதில் கேரளா மாநிலம் முதல் இடம் பெற்றுள்ளது.
அதே போல் கல்வியில் எடுத்துக்கொண்டால் 2003 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 80 ஆயிரம் பேர் நன்றாக பாருங்கள் அதே மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் போது 10 லட்சத்தி 30 ஆயிரம் பேர் ஆக 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் படிப்பை நிறுத்தியுள்ளார்கள்

கல்வி கட்டணத்தை கட்ட முடியாமல் நிறைய பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.அதே போல் கல்வியை கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் கூட நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் குஜராத் இருக்கும் போது நம் கழக ஆட்சி ஆட்சியை குறை கூறுகிறார்.
எமர்ஜென்சியை பார்த்தவர்கள்..
ஜெயலலிதாவின் ஊதுகோலாக மோடி மாறி இருக்கிறார். அதே போல் ரிசவர் வங்கி வளர்ச்சி விகித கணக்கீட்டில் குஜராத் மாநிலம் 1981 யிருந்து 1985 வரை காங்கரஸ் ஆட்சியில் 16.29 சதவீதம். அதே 1990-1994 ஆண்டின் காங்கிரஸ் ஆட்சியில் 16.73 சதவீதம் அதுவே இப்பொழுது மோடியின் ஆட்சியில் 9.35 சதவீதம்.இப்படி குஜராத் இருக்கும் போது, மோடி பேசும் பொழுது கூறியிருக்கிறார் பி.ஜே.பி யை பார்த்து திமுக பயப்படுகிறதாம்.
அவருக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். எமர்ஜன்சியை பார்த்தே பயப்படாதவர்கள் திமுகவினர்...1975 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தோம். 1976 ஆம் ஆண்டே எமர்ஜன்சி நிலையை பிரகடனப்படுத்தினார். அதை ஆதரிக்க இந்திரா காந்தி அம்மையாரின் தூதுவர் ஒருவர் வந்து தலைவரை சந்தித்தார்.
அப்போது எமர்ஜன்சியை ஆதரிக்காவிட்டால் உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றார். அப்போது தலைவர் அவர்கள் தூதுவரிடம் கூறினார் நான் பேரறிஞர் அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்டவன். இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிறவன் நான் அல்ல என்று கூறி அனுப்பினார். உடனே கடற்கரையில் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளை திரட்டி திர்மானம் ஒன்றைப் நிறைவேற்றினோம்.
எமர்ஜன்சியை ஆதரிக்க மாட்டோம் என்று உடனடியாக கழக தோழர்கள் 500 க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட இயக்கம் நம் இயக்கத்திடம் மோடியின் பூச்சாண்டிக் எல்லாம் பயப்படாது.
மதவெறி கூட்டணி
பா.ஜ.க. கூட்டணி மதவெறி பிடித்த கூட்டணி. அவர்களின் தேர்தல் அறிக்கையில் காவிரி பற்றி இல்லை.. இலங்கை பற்றி ஒன்றும் இல்லை... கச்சத்தீவு பற்றி இல்லை... மீனவர்கள் பற்றி இல்லை ஆனால் என்ன கூறுகிறார்கள் ராமர் கோவில் கட்டப்படும் என்கிறார்கள்
இந்த மதவெறி பிடித்தவர்கள் கூட தான் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் பாமக ,தேமுதிக போன்ற கட்சிகள்...அதிலும் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் என்ன கூறுகினார் தெரியுமா முன்பு மரங்களை எல்லாம் வெட்டினார்கள் இப்போது பசுமை புரட்சி செய்யப் போகிறோம் என்கிறார்கள்....
20 ஆண்டாக ஒரு ஜாதியின் பெயரை சொல்லி கொண்டு போராட்டங்களை நடத்துகிறார் ஏதாவது ஒரு சமூகநீதி போரட்டத்தை நடத்தியிருப்பரா? ஆனால் இப்போது ஒரே கூட்டணிக்குள் இருக்கிறார்கள். ஆனால் அவர் தகுதிக்கு, வயதிற்கு, அனுபவத்திற்கு மரியாதை கொடுப்பவர்கள் நாம்.
பாஜக- அதிமுக கள்ளத் தொடர்பு
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட ,ஆனால் அவர் ஒரு அறிவு ஜீவி போல் எழுதுகிறார். பா.ஜ.க. போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது தான் நல்லது. மற்றக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அது அவர்களுடைய வெற்றியை உறுதி செய்யாது. ஓட்டுப் பிளவைத் தான் உண்டாக்கும்"
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் பா.ஜ.க.விற்கு ஆலோசகர், ஜெயலலிதாவிற்கு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதிலிருந்தே தெரியவில்லையா பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கள்ளதொடர்பு இருக்கிறது என்று...
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications