கார்ப்பரேட் சாமியார் ஜக்கி நிகழ்ச்சிக்கு மோடி வந்தால் போராட்டம்... எம்.எல். கட்சி எச்சரிக்கை
கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரமதர் மோடி வருவதற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கோவை: இயற்கை வளத்தை கொள்ளையடித்து வரும் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வந்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி, கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கோவையில் ஆதிவாசிகளின் நிலங்கள் அபகரிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, இயற்கை வளங்களை சுரண்டல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ். அவர் தலைமையில் நடைபெறும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல. எனவே, இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள கூடாது. நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவது உறுதியானால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் சார்பில் வருகிற 22 அல்லது 23ம் தேதி கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக பொறுப்பேற்றுள்ளது மக்கள் விருப்பத்திற்கும் அறநெறிகளுக்கும் எதிரானது. அதிமுகவின் முன்னாள், இன்னாள் பொதுச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆட்சி நடைபெறுவதாக கூறுவதே அவர்கள் ஆளத் தகுதியற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என்று குமாரசாமி குற்றம்சாட்டினார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications