மார்த்தாண்டம் பாலம் தரமான பொருட்களால் கட்டப்படுகிறதா? - எம்.எல்.ஏ கேள்வி
மார்த்தாண்டத்தில் அமைக்கப்படும் பாலம் தரமான பொருட்களைப் பயன்படுத்தி, உறுதியாக கட்டப்படுகிறதா என பிரின்ஸ் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி: மார்த்தாண்டத்தில் அமைக்கப்படும் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுமக்களுக்கு அச்சம் எழுந்துள்ளதால் அதனை பயன்படுத்த தயங்குகின்றனர் என எம்.எல்.ஏ பிரின்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
மார்த்தாண்டம் பகுதியில் பாலம்கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் தரமான பொருட்களால் கட்டப்படுகிறதா என பொதுமக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்த்தாண்டத்தில் நடைபெறும் இரும்பு மேம்பால பணிகள் குறித்து பொதுமக்களிடமும், பொறியாளர்களிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சாலையில் எப்போதும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் பாலம் உறுதியாக அமைக்கப்படுகிறதா என்று சந்தேகமாக இருப்பதாக பொறியாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரம் குறித்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனால் பாலத்தின் உறுதிதன்மை குறித்து மக்களுக்கு அதிகாரிகள் விளக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் இதுபோல் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. தமிழகத்திலும் இது போன்ற நிகழ்வு ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தை போக்க மத்திய அமைச்சரும், அதிகாரிகளும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications