விதிமுறைகளின்படியே 18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. சபாநாயகர் தரப்பு வாதம்
எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விதிமுறைகளின் படியே 18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விதிமுறைகளின் படியே 18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு தெரிவித்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்றும் மற்றொரு நீதிபதியான சுந்தர் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கினர்.

மூன்றாவது நீதிபதி
இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பு வழங்கியதால் தகுதிநீக்க வழக்கை 3வது நீதிபதிக்கு மாற்றி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதியின் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது
அப்போது வாதிட்ட சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்ததில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். அரசை கலைக்கவோ பெரும்பான்மையை நிரூபிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

விதிகளின்படியே தகுதிநீக்கம்
ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காதபோதும் 18 எம்எல்ஏக்களும் ஏன் கட்சிக்கு திரும்பவில் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.விதிமுறைகளின்படியே 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்ததாக 18 பேரும் கூறுகின்றனர். பின்னர் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

விரைவில் தீர்ப்பு
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இருதரப்பு வாதங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications