தாம்பரம் அருகே.. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரிடம் செல்போன் பறிப்பு..செத்துப்போன மனிதநேயம்
சென்னை: சென்னை தாம்பரம் அருகே விபத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்யாமல் அவரிடம் இருந்து செல்போனை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மனிதநேயமற்ற செயலால் விபத்தில் சிக்கிய இளைஞர் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது இளைய மகன் கார்த்திகேயன் (வயது 25) பிசிஏ முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 23 ஆம் தேதி தனது பெரியம்மா வீட்டிற்கு பைக்கில் சென்ற கார்த்திகேயன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது மகாலட்சுமி நகர் அருகே சாலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் கிடந்த கார்த்திகேயேன், விபத்தில் சிக்கி விட்ட தகவலை தனது மாமாவை தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார்.
கார்த்திகேயன் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்து பதறிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கின்றனர். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் கார்த்திகேயேன் எந்த இடத்தில் விபத்தில் சிக்கியிருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் இரவு முழுவதும் பரிதவிப்புடன் தேடி அலைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்து கிடந்த கார்த்திகேயனுக்கு உதவாமல் அவரது செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்று சுவிட்ச் ஆப் செய்து இருக்கிறார். ஆபத்து காலத்திலும் உதவமால் கொடூர மனத்துடன் செல்போனை திருடிச்சென்ற நபரால் கார்த்திகேயனை உரிய நேரத்தில் அவரது பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதிகாலையில், அந்த வழியாக ஒரு கடைக்காரர், இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்க நிலையில் கிடப்பதாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திகேயனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.

தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையிலும் பலனளிக்காமல் கார்த்திகேயகன் மூளைச்சாவு அடைந்தார். இந்த தகவலை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து கண்ணீர் விட்டு கதறினர். கார்த்திகேயனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து கார்த்திகேயன் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் மல்க கார்த்திகேயன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபருக்கு உரிய நேரத்தில் உதவியிருந்தால் கார்த்திகேயனை காப்பாற்றியிருக்கலாம். இரக்க குணம் இல்லாமல் கல் நெஞ்சம் படைத்த கொடூரன் செல்போனை மனித நேயம் இன்றி திருடிவிட்டானே என்று அங்கிருந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
-
'கணவனுக்கு பதில்' தாம்பரம் தனியார் பள்ளி ஆசிரியையின் நட்பு.. புழல் சிறையில் மேடவாக்கம் இளைஞர் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications