2 நாட்களில் 5 இடங்களில் மோடி கூட்டம்.. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக!
நாகர்கோவில்: தமிழக சட்டசபைத் தேர்தலில் பிரதமர் மோடி பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்ட 5 இடங்களில் பிரசாரம் செய்து பேசவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது. ஓரிரு சிறு கட்சிகளே அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க கிடைத்தன. அதை வைத்து தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக.
சுரத்தே இல்லாமல் பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி பாஜகவுக்காக வாக்கு சேகரிக்க தமிழகம் வருகிறார்.

5 இடங்களில்...
பிரதமர் மோடி மொத்தம் 5 இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் அவர் பேசவுள்ளாராம்.

ஏழுசாட்டுபத்து...
கன்னியாகுமரி அருகே ஏழுசாட்டுபத்து என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த இடத்தை இன்று காலை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

விரைவில் விவரம்...
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமரின் சுற்றுப்பயண விவரம் விரைவில் அறிவிக்கப்படும். 8ம் தேதி அவர் கன்னியாகுமரி வருகிறார். 2 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பார்.

நாங்கள் வெல்வோம்...
தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மிகப்பெரிய வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அடிமையாக்கிய திராவிடக் கட்சிகள்...
தமிழக இளைஞர்களை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மதுவுக்கு அடிமையாக்கி விட்டன. இலவசங்களை கொடுத்து மக்களை கொத்தடிமையாக வைத்து இருக்கிறார்கள்.

அதிமுக ஆதரவு அதிகாரிகள்...
தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்னுக்கு சென்று விட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். 234 தொகுதிகளிலும் அவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கலாம். மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறி இருப்பதாக ஜெயலலிதா கூறுவதில் உண்மையில்லை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications