ஜெயலலிதாவுக்கு போன் மூலம் மோடி வாழ்த்து: முழு ஒத்துழைப்புக்கு உத்தரவாதம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி வெற்றி பெற்றதற்கு அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் மோடி இன்று மதியம் ஜெயலலிதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றியதற்காக அவர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மோடி பிரதமராக வெற்றிகரமாக செயல்பட ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு இருக்கும் என்று மோடி ஜெயலலிதாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
முன்னதாக ஜெயலலிதா மோடிக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அர்த்தமுள்ள ஒத்துழைப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications