50 நிமிடங்கள் என்ன செய்தீர்கள்... இந்தப் பேச்சு நாகரீகமானதா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்?
சென்னை: மோடி - ஜெயலலிதா சந்திப்பை பற்றி பொது இடத்தில் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்பது உண்மையே. உங்களது 50 நிமிட சந்திப்பில் என்ன செய்தீர்கள்? என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேட்டது எந்த வகையில் நாகரீகமானது என்று தெரியவில்லை.
அதை விட, எனக்குத் தெரியும் இந்த வயதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்று சிரித்துக் கொண்டும் அவர் கூறியது இன்னும் நாராசமானது.

இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாக அதிமுகவினர் போராட்டம் நடத்துவதோடு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்தனர். இப்படி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உருவபொம்மையை செருப்பால் அடிப்பதை டிவியில் பார்த்த போதே நெஞ்சு பதை பதைக்கிறதே... உருவ பொம்மையை எரிப்பதா?... நடப்பது ஹிட்லர் ஆட்சியா என்று சந்தேகம் வருகிறது என்று கேட்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
பிரதமர் நரேந்திர மோடி அரசு மரபுகளைப் பற்றிக் கவலைப்படாமல், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கே சென்று விருந்தில் கலந்து கொண்டது பற்றி, அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்ததைப் போல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிறார் கருணாநிதி.
கூடவே, இளங்கோவன் தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அ.தி.மு.க. ஆட்சியினர் வழக்கம் போல, "அவதூறு வழக்கு" தொடுக்கலாம், என்று ஐடியாவும் கூறியிருக்கிறார் கருணாநிதி. அந்த ஐடியாவை உடனே செயல்படுத்தியும் விட்டார் முதல்வர் ஜெயலலிதா.
அரசாங்க ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ தலைவர்கள் சந்திக்க நேரிட்டால், அதிலும் ஆண் - பெண் தலைவர்கள் சந்திக்க நேரிட்டால், அவர்களின் உறவுகளைக் கொச்சைப்படுத்தி பேசுவது இன்றைக்கு அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதா இடையேயான சந்திப்பை கள்ள உறவு என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியது எந்த விதத்தில் நியாயம்? நான் கள்ள உறவு என்று சொன்னது அதிமுக - பாஜக இடையே உள்ள உறவை என்று சொல்லி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் உண்ணாவிரதப்பந்தலில் பேசிய, இளங்கோவனோ, சசிபெருமாள் மரணத்திற்கு ஒரு வார்த்தை வரவில்லை, பேசமுடியவில்லை என்று சொல்கிறார்கள். பின்னென்ன செய்தீர்கள் ஐம்பது நிமிடங்கள் நீங்களும் மோடியும்... தோழர்களே தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.... (சிரித்துக்கொண்டே) எனக்குத் தெரியும் இந்த வயதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்று சிரித்துக்கொண்டே முடிக்கிறார் இளங்கோவன்.
இதைக்கேட்ட அதிமுக தொண்டர்களுக்கு கொதிக்காதா? அதிமுகவினர் போராட்டம் நடத்தினால் அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு எதிர்கட்சியினர் ஒன்றாக இணைந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பேசுகின்றனர் இது எந்த விதத்தில் நியாயம்.
காங்கிரஸ் கட்சியிலும் மகளிர் அணியினர் இருக்கின்றனர். கட்சி ரீதியாக எந்த பெண் அரசியல் தலைவரையும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனிமையில் சந்தித்து பேசமாட்டாரா? அவர்கள் கட்சியைச் சேர்ந்த மகளிர் அணியினரிடம் கூட அவர் பேசவே மாட்டாரா? அல்லது பேசியதில்லை. இதை யாராவது கொச்சைப்படுத்தி பேசினால் காங்கிரஸ் கட்சியினர் விட்டு விடுவார்களா?
இதற்கு பாமக, தமாகா, தேமுதிக தவிர்த்த சில கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வக்காலத்து வாங்கி பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. மதிமுக தலைவர் வைகோ, அன்பு சகோதரி என்று அழைக்கும் முதல்வர் ஜெயலலிதாவை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது சரியா? சகோதரியை யாராவது கொச்சைப்படுத்தி பேசினால் விட்டு விடுவாரா வைகோ?
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தொலைக்காட்சிகள் வேறு அதை மையப்படுத்தி விவாதம் நடத்தியதுதான் கொடுமையிலும் கொடுமை. குழாயடிச் சண்டையை விட இது ரொம்ப மோசமாக இருக்கிறது.
கிராமங்களில்தான் வேலையற்றவர்கள் இதுபோன்ற விசயங்களை புறம் பேசுவார்கள், ஆனால் அரசியலில் இருக்கும் பெரிய தலைவர்களே பெண் தலைவர்களைப் பற்றி இப்படி கொச்சையாகப் பேசலாமா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications