கருணாநிதி-மோடி சந்திப்பு.. சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு.. என்னமோ இடிக்குதே?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கருணாநிதி-மோடி சந்திப்பு.. சசிகலா வீட்டில் ஐடி ரெய்டு.. என்னமோ இடிக்குதே?- வீடியோ

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து சென்ற ஒரு சில நாட்களில் சசிகலா குடும்பத்தாரை ஐடி ரெய்டுகள் சுற்றி வளைத்துள்ளதை திமுகவினர் சிலர் பெருமையாக பேசுவதை கேட்க முடிகிறது.

  தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பங்கேற்க, கடந்த திங்கள்கிழமை சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திடீரென கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

  இந்த சந்திப்பு திமுகவினருக்கே ஆச்சரியம் ஏற்படுத்தியது.

  தொண்டர்கள் சந்தேகம்

  தொண்டர்கள் சந்தேகம்

  இந்த நிலையில், இன்று சசிகலா குடும்பத்தாருக்கு தொடர்புள்ள மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என மொத்தம் 90 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றுக்கொண்டுள்ளது. இது திமுக தொண்டர்கள் சிலருக்கே வேறு வகை சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

  திமுகவுக்கு தொல்லையில்லை

  திமுகவுக்கு தொல்லையில்லை

  மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இருந்தபோதே 2011ல் கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது. ஆனால் இப்போது என்னதான் பாஜகவை திமுக எதிர்த்தாலும் திமுகவுக்கோ, அதை சார்ந்தவர்களுக்கோ ஐடி மற்றும் சிபிஐ தரப்பு எந்த நெருக்கடியும் தரவில்லை.

  அதிமுகவினரே இலக்கு

  அதிமுகவினரே இலக்கு

  அதேநேரம், தொடர்ச்சியாக ஆளும் அதிமுக அரசுடன் தொடர்புள்ளவர்களே ரெய்டுகளுக்கு உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக, தினகரன் மற்றும் சசிகலா தரப்புதான் பாதிக்கப்படுகிறது. நேரடியாகவே இம்முறை தினகரன், சசிகலா ஆகியோரின் வீடுகளில் ரெய்டுகள் நடைபெற்றுள்ளன.

  திமுகவினர் மகிழ்ச்சி

  திமுகவினர் மகிழ்ச்சி

  கருணாநிதியை மோடி சந்தித்தது, ஸ்டாலின் அவரை அன்போடு வரவேற்றது என இவை அனைத்தையும் பொருத்திப் பார்த்து சில திமுகவினர் மகிழ்ச்சியடைவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

  கள நிலவரம்

  கள நிலவரம்

  இந்த ரெய்டுக்கும், கருணாநிதியுடனான மோடி சந்திப்புக்கும் தொடர்பு இல்லை என்று கள நிலவரங்கள் கூறுகின்றன. அப்படி தொடர்பிருந்தால் ஆளும் கட்சி பிரமுகர்கள் வீடுகளில்தானே ரெய்டு நடந்திருக்கும், ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பவர் வீடுகளில் ஏன் ரெய்டுகள் நடக்கின்றன என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Modi and Karunanidhi meet leads to IT raids in Sasikala faction houses, says some DMK cadres.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற