மோடி பிரதமராக 24%; ஜெ., பிரதமராக 17% பேர் தமிழகத்தில் ஆதரவு- சி.என்.என்- ஐபி.என் சர்வே
சென்னை: நாட்டின் பிரதமராக பாஜகவின் நரேந்திர மோடிக்கு 24% பேரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 17% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கிறது சி.என்.என். ஐபி.என் சர்வே.
லோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் விரிவான கருத்து கணிப்புகளை சி.என்.என்.ஐபிஎன்- லோக்நிதி- தி வீக் வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
இதேபோல் ராஜிவ் வழக்கில் 7 தமிழர் விடுதலை, தமிழகத்தின் முதன்மை பிரச்சனை எது என்பது தொடர்பாகவும் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது இது.

மோடிக்கு 24%..
நாட்டின் பிரதமராக மோடி வரவேண்டும் என்று தமிழகத்தில் 24% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கிறது கருத்து கணிப்பு.

ஜெக்கு 17%
மோடிக்கு அடுத்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வேண்டும் என்று 17% பேர் கூறியுள்ளனர்.

ராகுலுக்கு 9&
ஆனால் காங்கிரஸ் கட்சியின் ராகுலுக்கு 9%, சோனியாவுக்கு 5% என ஒற்றை இலக்க ஆதரவுதான் கிடைத்திருக்கிறது.

மன்மோகனுக்கு 3%
தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 3%, திமுக தலைவர் கருணாநிதி பிரதமராக 3% பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்

ஜெ. பிரதமரானால்..
நாட்டின் பிரதமராக ஜெயலலிதா பொறுப்பேற்றால் மிகச் சிறந்த ஆட்சியைத் தருவார் என்று 37% பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவுக்கு வாக்களிப்போரில் 35% பேரும் ஜெவின் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளனர். அதிமுகவினரில் 72% ஜெ.வின் ஆட்சி சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

ஜெ. நல்ல பிரதமர் இல்லை..
அதே நேரத்தில் ஜெயலலிதா நல்ல பிரதமராக செயல்படமாட்டார் என 37% பேர் பொதுவாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். பாஜகவுக்கு வாக்களிப்போரில் 36%பேரும் இக்கருத்தை கூறியுள்ளனர். அதிமுக வாக்காளர்களில் 14% பேரும் இக்கருத்தை ஆமோதித்துள்ளனர்.

நம்பிக்கை அதிகம்..
தமிழகத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயை விட இப்போது ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு அதிகம் என்பதற்கு கூடுதல் ஆதரவு கிடைத்திருக்கிறதாம். கடந்த மாதம் 24% ஆக இருந்த இந்த எதிர்பார்ப்பு தற்போது 33% ஆக அதிகரித்துள்ளதாம். அதேபோல் அவர் பிரதமராக வாய்ப்பு இல்லை என்று கடந்த மாதம் 48% பேர் கூறியிருந்த நிலையில் இது தற்போது 37% ஆக குறைந்தும் போயுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications