4 மாவட்டங்களுக்கு பயன் தரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை.. திறந்து வைத்தார் மோடி
கோவை: கோவை சி்ங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கட்டடங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, கவர்னர் ரோசைய்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2009ம் ஆண்டு சென்னை மற்றும் கோவையில் புதிதாக மருத்துவ கல்லுாரி கட்டப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கோவை வரதராஜபுரத்தில், 520 கோடி ரூபாய் மதிப்பில், கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்து, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை திறந்து வைக்க இன்று கோவை வந்தார் பிரதமர் மோடி. மாலை 4 மணியளவில் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைத்தார்.

மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை
புதிய இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ மனையில், புறநோயாளிகள், உள்நோயாளிகள், 24 மணி நேரமும் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மருத்துவக் கல்லுாரி ஆகியவற்றுக்கு, தனித்தனி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் அனைத்து வசதிகளும், சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏழு லட்சம் சதுர அடி பரப்பில், நான்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ கல்லுாரியுடன் இணைந்த இம்மருத்துவமனையில், 31 துறைகள் உள்ளன. இதில், 17 துறைகள் பொதுவானவை; 14 சிறப்பு மருத்துவ துறைகள். புறநோயாளிகள் பிரிவுடன், அவசர மருத்துவ சேவைப்பிரிவும் செயல்படும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
24 மணிநேர சிகிச்சை
இப்பிரிவில், சிகிச்சை பெற்றவர்களை கண்காணிக்க, சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவில், நான்கு தளங்களில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் செயல்படும் வகையில், வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவும் உள்ளது.

4 மாவட்ட தொழிலாளர்கள்
மருத்துவமனையில் உள்ள அனைத்து, அறுவை சிகிச்சை அரங்குகளும் நோய் தொற்றை தவிர்க்கும் வகையில், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட தொழிலாளர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் இடமாக, இம்மருத்துவமனை அமைந்துள்ளது.

பொன். ராதாகிருஷ்ணன்
மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஒரு லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட தொழிலாளர்களுக்கு பயன்தரும் என்றார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications