வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர்... கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்த அனல் மின் நிலைய ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரம் ஓய்ந்த பிறகு தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பணியை தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 350 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டும் இதுவரை அவர்கள் வாகன சோதனையில் மட்டும் தான் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினர் பணம் கொடுப்பதாக புகார் அளித்தாலும் காலதாமதமாகவே அந்த பகுதிக்கு செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியின் 60வது வார்டு தெர்மல் நகர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் அனல் மின் நிலைய அதிமுக தொழிற்சங்க துணை செயலாளராகவும் இருந்து வருகிறார். அவர் நேற்று இரவு கேம்ப் 1 மற்றும் கேம்ப் 2 பகுதியில் வீடு வீடாக ஓட்டுக்கு ரூ.250 விதம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் அப்பகுதியை சேர்ந்த வட்ட செயலாளர் கருணாமூர்த்தியும் உடன் இருந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த திமுகவினர் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். மெதுவாக வந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு பணம் வழங்கிவிட்டு நின்றிருந்த முத்துராஜை மட்டும் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை கைப்பற்றினர். இதற்கிடையே அதிகாரிகள் வருவதை பார்த்த கருணாமூர்த்தி உள்ளிட்ட அதிமுகவினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
முத்துராஜை பறக்கும்படை அதிகாரிகள் தெர்மல் நகர் போலீசில் ஒப்படைத்தனர். முத்துராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பட்டியலை வாங்கி யார், யாருக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications