பிளஸ்டூ, எஸ்எஸ்எல்சி மட்டும் படித்து விட்டு ஆசிரியர்களாகப் பணியாற்றும் 1 லட்சம் பேர்!
சென்னை: தமிழகத்தில் உரிய கல்வித் தகுதி இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்களாம்.
இவர்கள் குறைந்த கல்வித் தகுதியுடன் வேலை பார்த்து வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
தமிழக பள்ளிகளில் மொத்தம் உள்ள கிட்டத்தட்ட ஐந்தே கால் லட்சம் ஆசிரியர், ஆசிரியைகளில் ஒரு லட்சம் பேர் குறைந்த கல்வித் தகுதியுடன் கூடியவர்கள்.

பிளஸ்டூ பாஸ்
இதில் 80,659 ஆசிரியர்கள் பிளஸ்-2 மற்றும் அதற்கு கீழ் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாவது பாஸ்
33,679 ஆசிரியர்கள் இடை நிலை கல்வி அதாவது 10வது வகுப்பு படித்தவர்கள்.

பட்டதாரிகள்
பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 87 ஆயிரத்து 391 ஆகும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 12 பேரும் உள்ளனர்.

பிஎச்டி - எம்.பில்
எம்.பி.எல் மற்றும் பி.எச்.டி தகுதி உடையவர்களின் எண்ணிக்கை 37,624 பேர் ஆகும்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று
இதில் பிளஸ்டூ படித்து விட்டு ஆசிரியர் பயிற்சியை முடித்து ஆசிரியராகப் பணியாற்றும் தகுதி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வை எழுதி ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பணி வழங்கப்படுகிறது.

டிகிரி வாங்காமலேயே
இருப்பினும் டிகிரி வாங்காமலேயே கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் ஆசிரியர்களாகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர்கள் 5ம் வகுப்பு வரை மட்டுமே பாடம் நடத்துவார்கள்.

தனியார் பள்ளிகளின் நிலையே வேறு
இது அரசுப் பள்ளிகளில் காணப்படும் நிலைதான். ஆனால் பல தனியார்ப் பள்ளிகளில் உரிய ஆசிரியர் படிப்பை படிக்காத, வெறும் பட்டம் மட்டும் பெற்ற பலர் ஆசிரியர்களாக பணியாற்றும் நிலையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications