இலங்கையில் தவிக்கும் மகள்.. மீட்டுத் தர கலெக்டரிடம் தாய் கண்ணீர் மனு
இலங்கையில் தனது மகள் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் அவரை கண்டுபிடித்து தர தாய் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி: இலங்கையில் கணவருடன் வசித்து வந்த மகள் 2015ம் ஆண்டிற்கு பின்னர் பேசவே இல்லை என்பதால் அவர் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில், அவரை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் கண்ணீர் மல்க தாய் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி நடுத்தெருவை சேர்ந்த வீரபுத்திரன். இவருக்கு கனகம்மாள் என்ற மனைவி உள்ளார். அவர் இன்று தூத்துக்குடி ஆட்சியர் ரவிக்குமாரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கனகம்மாள் கூறியிருப்பதாவது:
எனது மகள் தங்கம். அவருக்கு 27 வயது ஆகிறது. கொழும்பு பண்டாரநாயகா பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அமிர்தம் எங்களது உறவினர். அவரது மகனான விக்னேஸ்வரன் என்கிற கண்ணனுக்கு கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி திருமணம் செய்து கொடுத்தோம். திருமணம் முடிந்த பின்னர் எனது மகள் தங்கமும், மருமகன் கண்ணனும் மணியாச்சியிலேயே வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு பெற்றோரை பார்க்க வேண்டும் என்று கூறி விக்னேஸ்வரன் எனது மகள் மற்றும் குழந்தைகளுடன் கொழும்பு சென்றார். அங்கு சென்ற பின்பு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து எனது மகள் என்னுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார். ஆனால் கடந்த 2015 முதல் எனது மகள் என்னிடம் பேசவேயில்லை.
தற்போது வரை அவள் என்னிடம் தொடர்பு கொள்ளவும் இல்லை. எனது கணவர் வீரபுத்திரன் இறந்து விட்டார். எனது மகள் தங்கம் மற்றும் 3 குழந்தைகளின் கதி என்னவென்றே தெரியவில்லை. உயிரோடு இருக்கிறார்களா இறந்து விட்டார்களா அல்லது அவளை சித்ரவதை செய்கிறார்களா என எதுவும் தெரியவில்லை. இது சம்பந்தமாக நான் பலமறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகள் நிலைமை குறித்து அறிவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கனகம்மாள் கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications