நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட கடும் எதிர்ப்பு... அதிர்ச்சியில் புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் தாம் போட்டியிட கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் புதுவை முதல்வர் நாராயணசாமி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம்.
புதுவை முதல்வராக பெரும் சர்ச்சைகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்டார் நாராயணசாமி. ஆனால் புதுவை மாநில காங்கிரஸ் தலைவரான நமச்சிவாயம் ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் ஒருவழியாக முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டார் நாராயணசாமி. அவர் தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. இதனால் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டிய கட்டாயம் நாராயணசாமிக்கு உண்டு.
அவருக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுத்தர எம்.எல்.ஏ. ஜான்குமார் முன்வந்திருக்கிறார். ஆனால் ஜான்குமாரின் மனைவி மற்றும் கிறிஸ்துவ அமைப்புகள், நாராயணசாமிக்கு தொகுதியை விட்டுத்தரக் கூடாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கூடங்குளம் போராட்ட விவகாரத்தில் கிறிஸ்துவ அமைப்புகள் மீது அவதூறுகளை வீசியவர்; வெளிநாட்டு நிதிகளை என்ஜிஓ அமைப்புகள் பெற தடை விதித்தவர் என ஏகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் நெல்லித்தோப்பு தொகுதி கிடைக்குமா கிடைக்காதோ என அதிர்ச்சி அடைந்துபோயுள்ளாராம் முதல்வர் நாராயணசாமி.
அதேபோல் ஜான்குமார் எம்.எல்.ஏ.வும் என்ன செய்வது எனத் தெரியாமல் கை பிசைந்து கொண்டிருக்கிறாராம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications