அவசரப்பட்டு எதுவும் பேசாதீங்க, அமைதி ப்ளீஸ்.. ஓபிஎஸ் அணி தலைவர்களுக்கு மைத்ரேயன் வேண்டுகோள்!

ஓ.பன்னீர்செல்வம் இறுதி முடிவு எடுக்கும் வரை அவசரப்பட்டு எந்த கருத்துகளையும் கூற வேண்டாம் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினருக்கு மைத்ரேயன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் நிலவும் தற்போதைய சூழலில் அவசரப்பட்டு எந்த கருத்தையும் கூறாமல் ஓ.பன்னீர்செல்வம் இறுதி முடிவு எடுக்கும் வரை அமைதி காக்க வேண்டும் என்று சக கட்சியினரை எம்.பி மைத்ரேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும், வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அதிரடியாக அறிவித்தார்.

இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக கருதப்படுகிறது.

ஓபிஎஸ் அணி

ஓபிஎஸ் அணி

நாங்கள் கேட்டது சிபிஐ விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணையல்ல என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி கூறினார். மற்றொருபுறம் முதல்வர் எடுத்தது நல்ல முடிவு என்று அவர்கள் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் ஆதரவு கருத்தை தெரிவித்திருந்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கிடையே இணைப்பு குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மைத்ரேயன் டுவிட்டர்

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் எம்பி மைத்ரேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் சரியான நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சரியான முடிவு எடுப்பார், ஓ.பன்னீர்செல்வம் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார். அணிகள் இணைப்பு குறித்து இறுதி முடிவு எட்டும் வரை அவசரப்பட்டு எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காக்க வேண்டும் என்றும் மைத்ரேயன் கேட்டக் கொண்டுள்ளார்.

தீர்க்கமான முடிவு

தீர்க்கமான முடிவு

இதே போன்று முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நண்பர்களே! கடந்த ஆறு மாதங்களாக நாம் அனைவரும் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருகிறோம். ஓபிஎஸ் அளந்து பேசுபவர். அதிர்ந்து பேச மாட்டார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்து தீர்க்கமான முடிவு எடுப்பவர்.

Recommended Video

    ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தார் மதுசூதனன் | ADMK Mathusoothanan Supports OPS- Oneindia Tamil
    கருத்து கூற வேண்டாம்

    கருத்து கூற வேண்டாம்

    அனைவரையும் அரவணைத்து ஜனநாயக முறையில் செயல்படுபவர். தற்போது நாம் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். ஓபிஎஸ் அவர்கள் சரியான முடிவு எடுப்பார். ஒரு நாளானாலும் சரி ஒரு வாரமானாலும் சரி அவர் முடிவு எடுக்கும்வரை நாம் யாரும் தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து என்று மைத்ரேயன் பதிவிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+