மசூதியில்.. மந்திரிக்க வந்த பெண்ணுடன் இளைஞருக்கு கள்ளகாதல்.. கழுத்தை அறுத்து ஏரியில் வீசிய கணவர்!

இஸ்லாமிய இளைஞரை கொன்று ஏரியில் வீசியவரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று அல்லாஹ் மசூதியில் ஓதுவதற்கு தூக்கி சென்றார் அம்மா.. அந்த மசூதியில் இருந்த இஸ்லாமிய இளைஞருக்கும் அம்மாவுக்கும் கள்ளக்காதல் பத்திக்கிச்சாம்.. இது கடைசியில் ஒரு கொலை வரை வந்து முடிந்து, அந்த சடலம் ஒரு ஏரியில் மிதந்தது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது திருநாவலூர் பெரியபட்டு ஏரி.. இங்கு கடந்த 14ம் தேதி, ஒருவர் சடலமாக கிடந்தார்.. அவருக்கு 35 வயசு இருக்கும்.. கழுத்தை அறுத்து கொன்று, இந்த ஏரியில் வீசியுள்ளனர்.

இதை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்துவிட்டு அலறி ஓடினர்.. பிறகு திருநாவலுார் போலீசாருக்கும் விஷயம் போனது.

ஏரி

ஏரி

இதையடுத்து, அந்த சடலத்தையும் மீட்டனர்.. உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன.. கழுத்தில் ஆழமாக வெட்டுப்பட்டு இருந்தது. பின்னர், சடலத்தை கைபற்றி முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மாட்டத்துக்கு அனுப்பி வைத்து, விசாரணையையும் ஆரம்பித்தனர். இதற்காக 5 பேர் கொண்ட ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.

 சதாம் உசேன்

சதாம் உசேன்

இந்த சமயத்தில்தான், பண்ருட்டி அருகே உள்ள எல்.என் புரம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி ஸ்டேஷனில் புகார் தர வந்தார்.. அவர் சொன்ன அடையாளங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது, அவர்தான் கொலை செய்யபட்டவர் என்பது தெரியவந்தது.

 செல்போன்

செல்போன்

பெயர் சதாம் உசேன்.. எல்.என் புரம் பள்ளிவாசலில் ஹஜ்ரத் தாக இருந்து வந்துள்ளார் என்பது தெரிந்தது.. இதையடுத்து, அவரது செல்போன் நம்பர்களை வைத்து விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் அன்சாரி என்பவர் சிக்கினார்.. அவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.. அன்சாரி சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டும் போலீசார் அரண்டு போய்விட்டனர். இவர் பீகாரில் இருந்திருக்கிறார்.. 12 வருஷத்துக்கு முன்னாடியே இங்கு வந்துவிட்டாராம்.. டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார்.

 குழந்தை

குழந்தை

கல்யாணம் ஆகி குழந்தையும் உள்ளது. இந்த குழந்தைக்குதான் திடீரென உடம்பு சரியில்லாமல் போயுள்ளது. அப்போது மசூதியில் மந்திரிப்பதற்காக குழந்தையை அன்சாரி மனைவி தூக்கி சென்றுள்ளார்.. அப்போது, சதாசேனுக்கும் அன்சாரி மனைவிக்கும் கள்ளக்காதல் வந்துவிட்டதாம்.. 5 வருஷமாகவே இந்த கள்ள காதல் வளர்ந்து வந்துள்ளது. இது தெரிந்து மனைவியை அன்சாரி கண்டித்துள்ளார்.. ஆனால், காதலனை விட மனைவி தயாராக இல்லை.. அதனால் சதாம் உசேனை தீர்த்துகட்ட அன்சாரி பிளான் செய்தார்.

பைக்

பைக்

பிறகு ஒருவாரமாகவே அவரை கொலை செய்ய எப்படி எப்படியோ முயன்றுள்ளார்.. ஆனாலும் அவரை கொல்ல முடியவில்லை.. அதனால் ஸ்டிரைட்டாக சதாம் உசேனுக்கே அன்சாரி போன் செய்து, "எலவனாசூர் கோட்டையில் உள்ள ஒருவருக்கு மந்திரிக்க வேண்டும்" என்று சொல்லி சம்பவத்தன்று பைக்கில் அழைத்து வந்திருக்கிறார்.

கைது

கைது

திருநாவலூர் பெரியபட்டு ஏரி அருகே வந்த போது சதாமுசேனை வண்டியை விட்டு இறக்கி, கையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலையும் செய்து ஏரியில் வீசியுள்ளார்.. இதற்கு 3 பேர் உதவியாக இருந்திருக்கிறார்கள். சதாம் உசேன் உடம்பெல்லாம் கத்தியால் கிழித்தார்களாம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அஷ்ரப் அலி, சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. ஒருவரை ஒருவரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+