ஆர்.கே. நகரில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்... அரசியல் மாற்றம் வரும்- டிடிவி தினகரன்
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று நம்புவதாக சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் மக்கள் என்னை நம்புவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைப்போம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர். கே. நகரில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆர்.கே நகரில் இன்று இடைத்தேர்தல் துவங்கிய நிலையில், அங்குள்ள மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
முறைகேடு நடைபெறுவதை தடுக்க சிசிடிவி காமிராக்கள், பறக்குள் படைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு சரியாக உள்ளது
டிடிவி தினகரன் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இதுவரை ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு சரியாக நடந்து வருகிறது என்று கூறினார். மக்கள் என்னை நம்புவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் தினகரன்.

மின்னணு இயந்திரம்
ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைப்போம் என்று கூறிய டிடிவி தினகரன்,வாக்கு இயந்திரங்கள் வரிசை படி இல்லாமல் திட்டமிட்டு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார். மின்னணு இயந்திரத்தில் பிரச்சினை எதுவும் செய்ய முடியாது. அப்படி பார்த்தால் குஜராத்தில் 170 தொகுதிக்கு மேல் வந்திருக்கணுமே.

நம்பிக்கைதானே வாழ்க்கை
மிசின்தானே... அது தப்பு பண்ண வாய்ப்பு இருக்கு. நாடாளுமன்றத்திலேயே மிசின் தப்பா சொல்லுதே. நம்புவோம். நம்பிக்கைத்தானே வாழ்க்கை. நிச்சயம்தான் நான் தான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு. இயற்கையின் ஒத்துழைப்புடன் 80 சதவிகிதம் வரை வாக்குப்பதிவு நடந்தால் நான் தான் ஜெயிப்பேன். மக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பார்கள்.

வெற்றி நிச்சயம்
ஆர்.கே. நகரில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பார்கள். நான் வெற்றி பெற்றால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications