For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சிசிடிவி கேமராவில் சிக்கிய நபர் பெங்களூர் கேமராவிலும் பதிவு.. சந்தேகம் இறுகுகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரயிலிலிருந்து வேகமாக இறங்கிச் சென்ற சந்தேக நபரின் உருவம், பெங்களூர் ரயில் நிலைய சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளதால், அந்த நபர் மீதான சந்தேகம் இறுகி வருகின்றது.

தற்போது அந்த வழுக்கைத் தலை கொண்ட மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய ரகசிய கேமராவி்ல் சிக்கிய அதே நபர் பெங்களூர் ரயில் நிலையத்திலும் சிக்கியுள்ளார். இதனால் அவர் யார் என்பது குறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

9ம் எண் பிளாட்பாரத்தில்

9ம் எண் பிளாட்பாரத்தில்

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-ம் நம்பர் நடைமேடையில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்ற போது, குண்டுகள் வெடித்த எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளுக்கு அடுத்த பெட்டியான எஸ்-3ம் எண் கொண்ட பெட்டியில் இருந்து இறங்கிய உயரமான ஒரு நபர் அவசரம் அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.

முகத்தை மூடியபடி வேக நடையில்

முகத்தை மூடியபடி வேக நடையில்

கைக்குட்டையை கட்டி முகத்தை மறைத்தபடி பதட்டத்துடன் அவர் வேக வேகமாக ஓடும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசாரின் சந்தேகப்பார்வை அவர் மீது விழுந்தது.

வழுக்கைத் தலை

வழுக்கைத் தலை

கேமராவில் சிக்கிய வாலிபரின் தலை வழுக்கையாக இருந்தது. அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

பெங்களூர் ரயில் நிலையத்திலும் அதே ஆசாமி

பெங்களூர் ரயில் நிலையத்திலும் அதே ஆசாமி

ஒருவேளை, வழுக்கை தலை ஆசாமி குண்டு வைத்தவராக இருந்திருந்தால், பெங்களூரில் இருந்தே அவர் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து வந்திருக்கலாம் என்று தமிழக போலீசார் கருதினர்.

எஸ்.பி அன்பு ஆய்வு

எஸ்.பி அன்பு ஆய்வு

எஸ்.பி அன்பு தலைமையிலான இன்னொரு தனிப்படை போலீசார் பெங்களூர் புறப்பட்டு சென்று பெங்களூர் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டிருந்த நடைமேடையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அங்கும் அதே நபர்

அங்கும் அதே நபர்

சென்னை சென்ட்ரலில் குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவசரமாக வெளியே ஓடிய அதே வழுக்கை தலை மர்ம நபர், பெங்களூர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளிலும் காணப்படுகிறார்.

தற்போது இவர் யார் என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

English summary
The mysterious bald head man who has been sited in Chennai central CCTV clippings has also been sited in Bangalore CCTV camera recordings too, police have found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X