விவசாயிகள் மரணம்- தடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியல்.. 100-க்கும் மேற்பட்டோர் கைது!
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்: பயிர்கள் கருகியதால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் நாகப்பட்டினத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய அளவு பொழியாததாலும் வறட்சி மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதனால் பயிர்கள் கருகி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்தவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சியினர் நாகப்பட்டினத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது, பயிர்கள் கருகியதைக் கண்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் வாங்கிய கடனுக்குக் கூட வட்டி கட்ட முடியாமல் கிடக்கிறது. எனவே, இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் கோரினார்கள்.
இதனைத் தொடர்ந்து, ரயில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications