ஆன்லைன் மூலம் அரசு கல்லூரி விண்ணப்பம்... கிராம மாணவர்களுக்காக இலவச முகாம் நடத்தும் நாம் தமிழர் கட்சி
தமிழகம்: ஆன்லைன் மூலம் கிராமப் புற மாணவர்கள் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இலவச முகாம்களை தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நடத்தி வருகிறது.
கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கான விண்ணப்ப பதிவு இம்முறை ஆன்லைனில் மட்டும் நடைபெறுகிறது. கடந்த 20-ந் தேதி முதல் ஆன்லைனில் இந்த விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

கிராமங்களில் இணைய இணைப்புகள் என்பது மிக மோசமான நிலையில்தான் கிடைக்கின்றன; கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிறுநகரங்களுக்குத்தான் வர வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் கொரோனாவை முன்வைத்து தமிழகத்தின் பல சிறுநகரங்கள் தீவிர லாக்டவுனை அமல்படுத்தி வருகின்றன. இதனால் உரிய காலத்தில் அரசு கலை கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளுக்கு மாணவர்கள் விண்ணபிக்க இயலாத சூழ்நிலை உருவாகும் நிலை உள்ளது.
இதற்காகவே தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் மாணவர்களுக்கான இலவச முகாம்களை நடத்துகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் கிராமப் புற மாணவர்களுக்கு இந்த இலவச வழிகாட்டுதல் முகாம்கள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications