பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அடித்துவிரட்டுவதைப் போல ஒருநாள் தமிழரை வட இந்தியர்கள்... எச்சரிக்கும் சீமான்
பசும்பொன்: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் வன்முறை அதிகரிப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல இன்னர் லைன் பெர்மிட் முறையை அமல்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: வடமாநிலத்தவர் சென்னையில் போலீசாரை தாக்கியது ஒரு தொடக்கம்தான். இதேபோல நிறைய நடைபெறப் போகிறது. நிறைய நடக்கும்.

அண்ணன் இதை பலநாளாக பேசிகிட்டே இருக்கேன்.. ஆனால் பலரும் இதேவேலைதான் இவருக்கு என நினைக்கிறார்கள். அவர்களுக்குள் (வட இந்தியர்கள்) அடித்து கொள்கிறவர்கள் நாளை நம்மை திருப்பி அடிக்க எவ்வளவு நேரமாகும்? பாலஸ்தீனம், இஸ்ரேல் பிரச்சனை என்னவாம்? இருக்க இடம் கொடுத்த பாலஸ்தீனர்களை அடித்து விரட்டுகிறது இஸ்ரேல். இதே நிலைமைதான்.. 40 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். 40 லட்சம் பேருக்கு வாக்குரிமையும் கொடுத்துவிட்டால் என் வாழ்வுரிமை என்னவாகும்? கர்நாடகாவில் தமிழர்களை அடித்து விரட்டி அடித்த போது இந்திய ராணுவம் எங்களை பாதுகாத்ததா? அதேபோல வட இந்தியர்கள் ஒருநாள் எங்களை அடித்து விரட்டுவார்கள். அப்போது எல்லோரும் வேடிக்கைதான் பார்ப்பார்கள். அதனால்தான் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல உள்நுழைவு அனுமதி தர வேண்டும்- இன்னர் லைன் பெர்மிட் தர வேண்டும் என்கிறோம்.

காவிரி பிரச்சனையில் ஒரு அரசியல் இருக்கிறது. தமிழரின் சொத்துகள் இந்தியர்கள் அனைவருக்கும் என பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. நரிமணம் பெட்ரோல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மூலமான மின்சாரம் உள்ளிட்டவை அனைத்துமே இந்தியர்களுக்கு என பொதுமைப்படுத்திவிட்டனர். ஆனால் அவரவர் நிலவளம், நீர்வளம் தங்களுக்குதான் என கேரளா, கர்நாடகா அரசுகள் செயல்படுகின்றன. அதனால்தான் நம்முடைய வளம் நமக்கே என்கிற உணர்வு வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, தேச ஒற்றுமை என பேசுகிறார்கள்.. அப்படி பேசுகிறவர்கள்தான் இந்த சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். பகை நாடுகளாக இருக்கிற இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதியை பகிர்ந்து கொள்கின்றன. சிந்து நதியில் 80% பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. ஆனால் காவிரி நீரில் ஒரு சொட்டு நீரைக் கூட தரமாட்டோம் என்கின்றனர். இது இந்திய இறையாண்மைக்கும் தேச ஒற்றுமைக்கும் எதிரானது என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications