தமிழகத்தில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்திருக்கு தெரியுமா?
நாகை மாவட்டம் தலைஞாயிறுவில் 27 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிக அளவு மழைப் பொழிவாக நாகை மாவட்டம் தலைஞாயிறுவில் 27 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வருகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடலோரங்களில் அனேக இடங்களில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் பரவலான மழை இருக்கும் என்றார்.

சென்னையில் இடியோடு மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடைவெளிவிட்டு சில நேரம் கனமழையும் இரவு இடியுடன் மழை பெய்யும். சில நேரம் பலத்த மழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

27 செ.மீ மழை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 27 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 24 செ.மீ, வேதாரண்யத்தில் 16 செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் மழை அதிகம்
பொன்னேரியில் 10 செ.மீ., பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினத்தில் தலா 9 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை., காரைக்கால், கடலூர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் வழக்கத்தைவிட இதுவரை 93 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு
சென்னையில் கடுமையான மழை பெய்த காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த பாலச்சந்திரன் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி பெரும் பகுதி கடலில் இருந்ததால் சாதாரண மழை பெய்யும் என எதிர்பார்த்தோம்.

அதிகபட்ச மழை
காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து கரைப்பகுதிக்கு வந்ததால் மாலை மூன்று மணிக்கு 1 செ.மீ பின்னர் 6 மணிக்கு 3 செ.மீ, இரவு முதல் கனமழையும் பெய்தது. நிலப்பகுதியில் நகர்ந்ததால் தான் அதிகப்பட்ச மழை அளவு இருந்தது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகம் புதுவையில் மழை
அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியில் விவசாயிகள்
காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சரியான அளவில் மழையில்லை. கடந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் நாகை மாவட்டத்தில் உயிரிழந்தனர். இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications