சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: "நளினி சிதம்பரம்" தலை உருள்வது ஏன்?

மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்த சென் 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி, ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்நிறுவனம்.
சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது.
செபி மீறல்
இந்திய முதலீட்டுச் சட்டப்படி, 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடு திரட்ட 'செபி' அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சாரதா நிதி நிறுவனம் அதை கண்டுகொள்ளவில்லை.
புதிய நிறுவனங்கள்
2009-ல் 'செபி' நோட்டீஸ் அனுப்பியதும், புதிதாக 200 நிறுவனங்களை உருவாக்கி, முதலீட்டாளர்களை அவற்றில் பிரித்துப் பதிவு செய்து, 'செபி'யின் முயற்சியை முறியடித்தது அந்நிறுவனம்.
ஏமாற்றிய சாரதா
அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கொந்தளித்தனர். இது தொடர்பாக மேற்கு வங்க அரசு விசாரணைக் கமிஷன் அமைக்க முயற்சித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் சிபிஐ விசரணைக்கு உத்தரவிட்டது. கைதுக்கு
கடிதம்
இந்த வழக்கில் சுதிப்த சென் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சிபிஐக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தன்னை மிரட்டி பண ஆதாயம் அடைந்த பிரமுகர்கள் விவரம் இடம்பெற்றிருந்தது.
அந்த பிரபலங்களில் நளினி சிதம்பரமும் ஒருவர்.
நளினி சிதம்பரம் பற்றி என்ன இருக்கிறது?
சுதீப்த சென்னின் கடிதத்தில் நளினி சிதம்பரம் பற்றி இடம்பெற்றுள்ள தகவல்கள்: -
மனோரஞ்சனா சிங் தனது பாசிட்டிவ் குரூப் நிறுவனத்தை விற்பது தொடர்பாக என்னை அணுகினார். இதற்காக அவர் என்னை சென்னைக்கு அவரது வழக்கறிஞரான நளினி சிதம்பரத்திடம் அழைத்துச் சென்றார். நளினி சிதம்பரம்.
நளினி சொன்னது என்ன?
அப்போது என்னிடம் மனோரஞ்சனா சிங், குவஹாத்தியில் டிவி சேனல் ஒன்றை தொடங்க விரும்புகிறார். அதனால் அவருக்கு ரூ42 கோடி கொடுத்து உதவுங்கள்.. என்று கேட்டுக் கொண்டார். இதற்கான ஒப்பந்தத்தையும் அவர் தயாரித்திருந்தார்.
ரூ1 கோடி கட்டணம்
இந்த ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர் கட்டணமாக ஒன்றரை ஆண்டு காலத்துக்கு ரூ1 கோடி நளினி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இந்த ஒப்பந்தம் தொடர்பாக நளினி சிதம்பரம் மேற்கு வங்கம் வந்து செல்வதற்கான விமான கட்டணம், அவர் தாஜ் பெங்கால் ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணம் அனைத்தையுமே செலுத்தினேன்.
மேலும் ப.சிதம்பரம் குடும்பம் ஆதரவாக இருந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் முடியும் என்றும் மனோரஞ்சனா கூறினார். ஆனால் நளினி சிதம்பரம் அப்படியெல்லாம் எந்த உறுதி மொழியும் தரவில்லை.
ரூ25 கோடி
இதில் ரூ.25 கோடியை மனோரஞ்சனா சிங்குக்கு நான் கொடுத்துவிட்டேன். ஆனால் எனக்கு பணம் தேவைப்பட்ட காலத்தில் இவர்கள் யாரும் எனக்கு கொடுத்து உதவ வில்லை இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
சிபிஐயும் நளினியும்
நளினி சிதம்பரம் விவகாரத்தை ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸ் கிளப்பியிருந்தது. தற்போது சிபிஐ அதிகாரிகள், நளினி சிதம்பரத்திடம் இருந்து அவர் தயாரித்த டிவி சேனல் தொடங்குவதற்கான ஒப்பந்த அறிக்கையை பெற்றுச் சென்றுள்ளனர். மேலும் ரூ1 கோடி கட்டணம் பெற்றது பற்றியும் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆலோசனைதானாம்
இதனால்தான் தான் விசாரிக்கப்படவில்லை.. ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தம்மிடம் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனைதான் நடத்தினார் என்று நளினி சிதம்பரம் விளக்கம் கொடுத்துள்ளார். நெருக்கடி பற்றி விசாரணை? அதே நேரத்தில் மனோரஞ்சனாவுக்கு ரூ42 கோடி கொடுக்க வேண்டும் என்று சுதீப்த சென்னுக்கு நளினி சிதம்பரம் நெருக்கடி கொடுத்தாரா? அதுபற்றி சிபிஐ விசாரிக்க இருக்கிறதா? என்பது பற்றி தெரிவிக்க சிபிஐ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications