எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை விடுவிக்க கூடாது.. நளினி உயர்நீதிமன்றத்தில் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க கூடாது என நளினி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு ஒரு முக்கியமான அரசாணையை வெளியிட்டது. அதன்படி சில ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க போவதாக அறிவித்து இருந்தனர்.

Nalini filled case against release of life sentenced prisoners

ஆனால் இதில் விதி எண் 435 பிரிவின் கீழ் சில கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதனால் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினிக்கு விடுதலை கொடுக்கப்பட மாட்டார்கள்.

இதனால் தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க கூடாது என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருக்கிறார். அதில் அரசாணையில் உள்ள '435 பிரிவின் கீழ் விடுதலை செய்யமாட்டோம்' என்ற வரி சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் மனுவில் ''நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னணியை ஆராயக் கூடாது. விடுதலை செய்யும் நடைமுறையில் கைதிகளை சமமாக நடத்த வேண்டும்'' என்றும் மனுவில் நளினி குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu government decided to release life sentenced prisoners due to MGR. Century Festival. Nalini filled case against release of life sentenced prisoners in Chennai high court.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற