காவி அடி.. கழகத்தை அழி.. அதிமுகவை பிளவு படுத்திய பாஜக.. நமது எம்ஜிஆர் பரபரப்பு கவிதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் இதழிலில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வெளியாகியுள்ள கவிதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது எம்ஜிஆர் நாளிதழில் கடந்த சில வாரங்களாகவே பாஜகவே திட்டி கவிதை எழுதி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நிலையில் நமது எம்ஜிஆரில் இன்று எழுதப்பட்டுள்ள கவிதை பாஜகவை கடுமையாக சாடியுள்ளது.

காவி அடி, கழகத்தை அழி என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கவிதையில் உத்தர்காண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பீகார், கோவா என பல்வேறு மாநிலங்களில் பாஜக பின் வாசல் வழியாக நுழைந்தது அதிகாரத்தை பிடித்ததாக எழுதப்பட்டுள்ளது.

ஆளுநர்கள்

ஆளுநர்கள்

புதுச்சேரி, மணிப்பூரில் ஆளுநர்களை அரசியல் ஏஜெண்டுகளாக்கியுள்ளதாகவும், நீதித்துறை, வருமானவரி, அமலாக்கப் பிரிவு, தேர்தல், ஆணையம், ஆகிய தன்னாட்சி அமைப்புகளை தலைகுனிய வைத்துள்ளது பாஜக என்று அந்த கவிதையில் குறிப்பிட்டுள்ளது.

விளைநிலங்கள்

விளைநிலங்கள்

பெட்ரோல் விலையை குறைப்போம், அமெரிக்க டாலரை 35 ரூபாய்க்குள் அடக்குவோம் என்று வாயாலே வடை சுட்டவர்கள். விளை நிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கியவர்கள் என்றும் கண்டித்துள்ளது அந்த கவிதை.

வெற்றுக்காகிதம்

வெற்றுக்காகிதம்

கரன்சியை வெற்றுக்காகிதமாக்கி கருப்புப் பணம் ஒழித்தோம் என்று கதையளப்பவர்கள் இவர்கள் முன்னின்று நடத்தியதெல்லாம் மோசடிகளே என்று குறிப்பிட்டுள்ளது.

மோடியா? லேடியா?

மோடியா? லேடியா?

மோடியா? இந்த லேடியா என்று சவால் விட்ட இயக்கத்தை மூன்றாக பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்தந்ததும்தானே என்று கடுமையாக கண்டித்துள்ளது நமது எம்ஜிஆர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Namathu MGR has blamed that it is BJP which divided the ADMK and has come out a strong poem against BJP.
Please Wait while comments are loading...