சசிகலா நடராஜனுக்கு எதிராக இளவரசி மூலம் அதிமுகவில் கலகம் ஏற்படுத்த மத்திய அரசு பிளான்! exclusive

சசிகலா நடராஜன் தங்கள் திட்டத்திற்கு இடைஞ்சலாக ஏதேனும் செய்தால் இளவரசியை வைத்து அதிமுகவிற்குள் கலகம் ஏற்படுத்த உளவுத்துறை உறுதுணையோடு மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா நடராஜனுக்கு 'செக்' வைப்பதற்காக இளவரசியை கொண்டு காய் நகர்த்த திட்டமிட்டுள்ளதாம் மத்திய அரசு.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவரும் நிலையில், அந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் தங்களுக்குத் ஏற்ற வகையில் அரசை கைக்குள் வைத்திருப்பதில் மத்திய அரசு ஓரளவுக்கு சாதித்து காட்டியுள்ளது. உதய் திட்டத்திற்கு தமிழகம் ஒப்புக்கொண்டது, பொது வினியோக திட்டத்தின் மாறுதலுக்கு ஒப்புதல் என மத்திய அரசின் தாளத்திற்கு ஆடி வருகிறது தமிழக அரசு.

[Exclusive: சர்ச்சையை கிளப்பும் சசிகலா புஷ்பா வெறும் அம்புதான்.. ஏவும் வில் யார் தெரியுமா?]

ஜெயலலிதா ஆரோக்கியமாக இருந்தபோது, இந்த திட்டங்களுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திடீரென நடந்த இந்த மாற்றம், பின்னணி மர்மங்களை போட்டு உடைத்துவிட்டது.

சசிகலா மீது எச்சரிக்கை

சசிகலா மீது எச்சரிக்கை

தமிழகத்தின் ஆட்சி, அதிமுக கட்சி இரண்டிலும் அதிகபட்ச அதிகாரத்தில் சசிகலா அமர்ந்திருப்பதை தெரிந்து வைத்துள்ள மத்திய அரசு, சசிகலாவின் கைகளில் அவ்விரண்டும் சென்றுவிடக்கூடாது என காய்களை நகர்த்த தொடங்கியது. அதன் விளைவுதான் அரசின் நடவடிக்கைகளில் நிகழ்ந்த திடீர் மாற்றங்கள்.

நம்பாத மத்திய அரசு

நம்பாத மத்திய அரசு

மத்திய அரசின் நெருக்கடிக்கு பயந்து மோடியிடம் சரண்டரானார் சசிகலா. ஆனாலும் சசிகலா பதுங்குவதை முழுமையாக மத்திய அரசு நம்பவில்லையாம். சசிகலாவின் பின்னணிகளையும் அவர்களது மூவ்களையும் மத்திய உளவுத்துறையும் தமிழக பா.ஜ.க. தலைவர்களும் மோடியின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டுபோயுள்ளனர் என்பதால் அவரை முழுமையாக நம்ப மத்திய அரசு தயாராக இல்லை.

இளவரசிக்கு வலை

இளவரசிக்கு வலை

ஜெயலலிதாவின் உடல் நலத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் சசிகலாவின் தொடர்ச்சியான மறைமுக திட்டங்களையும் கவனித்து வரும் மத்திய அரசு, சசிகலா ஆதிக்கத்தை ஒடுக்க இளவரசியை கையிலெடுக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சசிகலாவுக்கும் இளவரசிக்கும் தொடக்கத்திலிருந்தே பனிப்போர் நடந்து வந்திருக்கிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

கார்டனில் இருவரும் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் கூட, இந்த பனிப்போர் இருந்தது. ஜெயலலிதாவிடம் யார் செல்வாக்கோடு இருப்பது? யாருக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் தர வேண்டும்? என்பதிலிருந்தே இந்த பனிப்போர் துவங்கியுள்ளது. மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதா வீடு திரும்பினாலும் முன்பு போல் அதிக வேகத்துடன் அவரால் அரசியல் செய்ய முடியாது என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

இளவரசிக்கு இழப்பு

இளவரசிக்கு இழப்பு

எனவே தனது சொந்தங்களிலுள்ள எதிர் தரப்பினரின் ஆதாரவுகளைப் பெற்று தனக்குப் போட்டியாக இளவரசி வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் சசிகலா. அதற்காக இளவரசியை தங்கள் பிடியில் மிரட்டி வைத்திருப்பதோடு இளவரசி மற்றும் அவரது மகன், மகள்கள், மருமகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட உறவுகளிடமிருக்கும் சொத்துக்கள், பங்கு பரிவர்த்தனைகள், நிறுவன பொறுப்புகள் அனைத்தும் எழுதி வாங்கப்படுகிறது.

உறுதிமொழி

உறுதிமொழி

ஆனால், இப்போதுள்ள வசதிகளோடு எப்போதும் போல் இளவரசி இருக்கலாம் என்ற உறுதி மொழி மட்டும் அவருக்கு சொல்லப்பட்டுள்ளது. இப்படி இளவரசியை டம்மியாக்கிவிட்டு, சசிகலா கணவர் நடராஜன், மத்திய அரசுக்கு எதிராக சசிகலாவை தூண்டிவிடலாம் என மத்திய அரசு சந்தேகிக்கிறது. ஏனெனில் நடராஜன்தான் சசிகலாவின் மூளை என நினைக்கிறது மத்திய அரசு.

ஜெயலலிதா வருகை வேகம்

ஜெயலலிதா வருகை வேகம்

அப்படி சசிகலா திருப்பியடிக்க தயாரானால், அவரின் அதிகார ஆளுமையை உடைக்க இளவரசியை தங்கள் கையிலெடுக்கும் திட்டத்தை ரெடியாக வைத்துள்ளது மத்திய அரசு. ஜெயலலிதாவின் ஆரோக்கியத்தையும் அவரின் செயல்பாடுகளையும் பொறுத்து இளவரசியின் மூலம் ஒரு கலகத்தை உருவாக்குவதே மத்திய அரசின் எதிர்கால திட்டமாக இருக்கிறது. எது எப்படியோ, தமிழகம் அது தேர்ந்தெடுத்த கட்சியின் ஆட்சியின்கீழ் இருக்க வேண்டுமெனில், ஜெயலலிதா மீண்டும் சிங்க பலத்தோடு மீண்டு வர வேண்டியது கட்டாயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+