Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் பதவியில் இல்லாத குருமூர்த்தி அரசியல் செய்யும்போது நாங்கள் செய்யகூடாதா? நடராஜன் 'பொளேர்'

பாஜகவில் எந்த பதவியிலுமே இல்லாத 'துக்ளக்' குருமூர்த்தி அரசியல் செய்கிறார்... ஜெயலலிதாவை பாதுகாத்த எங்கள் குடும்பம் அரசியல் செய்ய கூடாதா? என சசிகலாவின் கணவர் நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பாரதிய ஜனதா கட்சியில் எந்த பதவியிலுமே இல்லாத துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியல் செய்யும்போது ஜெயலலிதாவை பாதுகாத்த எங்கள் குடும்பம் ஏன் அரசியல் செய்யக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூரில் நடராஜன் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடத்துவார். ஒவ்வொரு பொங்கல் விழாவிலும் நடராஜனின் பேச்சு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும். ஆனால் அதன் தொடர்ச்சியான நடவடிக்கை எதுவும் இருக்காது.

இந்த முறையும் தஞ்சாவூர் பொங்கல் விழாவில் அதிரடியாக பேசி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார் நடராஜன். தஞ்சையில் நடராஜன் பேசியதாவது:

எம்ஜிஆர் மறைந்தபோது...

எம்ஜிஆர் மறைந்தபோது...

எம்.ஜி.ஆர். மறைந்த போது அதைக்கூட ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கவில்லை. எனக்கு தகவல் வந்தவுடன் நான் சசிகலா, திவாகரனுக்கு மூலம் ஜெயலலிதாவுக்கு தெரிவித்து ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து வரச் சொன்னேன்.

ஜெ.வை அடைக்க முயற்சி

ஜெ.வை அடைக்க முயற்சி

அங்கு வந்த ஜெயலலிதாவை சிலர் அடைத்து வைக்க முயன்றனர். அவரை திவாகரன் மீட்டு ராஜாஜி அரங்கத்திற்கு அழைத்து வந்தார்.

விடிய விடிய பாதுகாத்தோம்

விடிய விடிய பாதுகாத்தோம்

அப்போது எம்.ஜி.ஆர். உடல் அருகே ஜெயலலிதாவை நிற்க வைத்தது நடராஜன், சசிகலா, திவாகரன், தினகரன் ஆகியோர் தான். விடிய, விடிய நின்ற அவரை நாங்கள் தான் பாதுகாத்தோம்.

வெங்கட்ராமன் கூட...

வெங்கட்ராமன் கூட...

எங்கள் குடும்பம் தான் அவரை காத்தது. அதனால் எங்கள் குடும்பம் தான் அரசியல் செய்கிறது. ஜெயலலிதாவை நாங்கள் ஆதரித்த போது யாரும் அவரை ஆதரிக்கவில்லை. ஜெயலலிதா முதல்வர் ஆவதை அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன் கூட ஏற்கவில்லை.

ஜெ.வை தோளில் தாங்கினார் சசிகலா

ஜெ.வை தோளில் தாங்கினார் சசிகலா

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியைத்தான் அவர்கள் எல்லோரும் ஆதரித்தனர். அதன் பின்னர் ஜெயலலிதாவை முதல்வராக்கினோம். 30 ஆண்டுகளாக ஜெயலலிதாவோடு துணை நின்றவர் சசிகலா. ஜெயலலிதா என்ன சாதி என்று நாங்கள் பார்க்கவில்லை. அ.தி.மு.க.வின் தலைவியாக பார்த்தோம். 30 ஆண்டாக எனது மனைவி சசிகலா அவரை தோளில் சுமந்தார்.

கொலை செய்ததாக சொல்வதா?

கொலை செய்ததாக சொல்வதா?

ஆனால் இன்று அவர் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று கூறுகிறார்கள். வெட்கமாக இல்லையா, என அவர்களை கேட்கிறேன். இந்த விஷமத்தை பரப்புகிறவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் முகமூடியை ஊர், ஊராக சென்று கிழித்துக்காட்டுவேன். சாதி, மத பேதம் இல்லாத தமிழகத்தில் அ.தி.மு.க.வை 36 ஆண்டுகளாக நாங்கள் ஏற்று உள்ளோம்.

30 நாட்கள் கூட எங்களை ஏற்க முடியலையா?

30 நாட்கள் கூட எங்களை ஏற்க முடியலையா?

ஆனால் 30 நாட்களுக்கு கூட எங்களை ஏற்க முடியவில்லை ஏன். யார் வந்தாலும் அவர்களை சந்திக்க தனி ஆளாக தயாராக உள்ளேன். எந்த காலத்திலும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த கும்பல் நாங்கள் அல்ல.

நீங்களா காப்பாற்றினீர்கள்?

நீங்களா காப்பாற்றினீர்கள்?

இப்போது குடும்ப அரசியல் செய்கின்றனர் என்று கூறுகின்றனர். ஏன் நாங்கள் குடும்ப அரசியல் செய்யக்கூடாது. அன்று ஜெயலலிதாவை சோ, குருமூர்த்தி, சுப்பிரமணியசுவாமியா காப்பாற்றினர்? எங்கள் குடும்பம்தானே காப்பாற்றியது. நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்.

ஆடிட்டர் குருமூர்த்தி சதி

ஆடிட்டர் குருமூர்த்தி சதி

ஆடிட்டர் குருமூர்த்திதான் திராவிடர்களுக்கு எதிராக பிராமணர்களுடன் சேர்ந்து சதி செய்கிறார். நான் அனைத்து பிராமணர்களையும் குறிப்பிடவில்லை. ஆனால் 10% பிராமணர்கள் தமிழகத்தை காவி மயமாக்க சதி செய்கின்றனர்.

இவ்வாறு நடராஜன் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+