ஓபிஎஸ் அணியில் நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன்!
மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் இன்று ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளார்.
சென்னை: திராவிடர் இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். ஆர்கே நகர் இடைதேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் புதியவர்கள் வருகையால் வலுவடைந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் கூவத்தூரிலிருந்து அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தப்பிச் சென்ற கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் நேற்று இணைந்தார். இருந்தாலும் அவர் தங்கள் அணிக்கு வருவார் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறிவருகிறார்.

இந்நிலையில் முன்னாள் டிஜிபியும் இலக்கியவாதியுமான திலகவதி ஐபிஎஸ் ஒ.பன்னீ செல்வம் அணியில் இன்று இணைந்தார். ஆர்கே நகர் தொகுதி இடைதேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஓ.பன்னீர் செல்வம் அணியின் பலம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இன்று இணைந்தார். ஆர்கே நகர் தொகுதி தேர்தல் நெருங்கும் நிலையில் ஓபிஎஸ் அணிக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications