தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணி, பலமான கூட்டணி: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது என்று இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். வரும் 2016ஆம் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக்கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி சார்பிலும், பாரதிய ஜனதா சார்பிலும், என் சார்பிலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பதில்களும்.

வலுவான கூட்டணி
கேள்வி: உங்கள் கூட்டணி எப்படி இருக்கிறது?
பதில்: தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணி. பலமான கூட்டணி.

கூட்டணி தொடருமா?
கேள்வி: சட்டசபை தேர்தலில் உங்கள் கூட்டணி தொடருமா?
பதில்: எங்கள் கூட்டணி வலுவானது என்று சொல்லி விட்டேன். எனவே இந்த கேள்விக்கு இடமே இல்லை. கூட்டணி தொடரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழிசை சவுந்தரராஜன்
இந்தப் பேட்டியின் போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், மோகன் ராஜூலு ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்தேகம் தீர்ந்தது
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமகவின் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் ஆகியோர், தமிழகத்தில் கூட்டணி நீடிக்கிறதா என்பதை பாஜக விளக்கவேண்டும் என்று சந்தேகம் எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று பேட்டியளித்துள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications