ஜெயங்கொண்டம் அருகே புளூவேல் விளையாட்டால் தாயை கொடுமைப்படுத்தும் மகன்.. இது வேற லெவல்!
ஜெயங்கொண்டம் அருகே புளூவேல் விளையாட்டால் தாயை மகன் கொடுமைப்படுத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே புளூவேல் விளையாட்டால் தாயை மகன் கொடுமைப்படுத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 'புளூவேல்' என்ற இணைய தள விளையாட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர்.
'புளூவேல்' விளையாட்டில் '50' சவால்கள் அளிக்கப்படுகிறது. ரயில் பாதையில் ரயில் வரும் போது செல்பி எடுப்பது, பேய் படம், அதிகாலையில் எழுவது நள்ளிரவில் மயானத்துக்கு செல்வது, கையில் பிளேடால் அறுத்துக்கொள்வது, மாடியில் இருந்து குதிப்பது என்பது உள்ளிட்ட சவால்கள் விடுக்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் தடை
இந்த ‘புளூவேல்' விளையாட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

போலீசார் ஆலோசனை
இந்தியாவிலும் புளூவேல் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாணவர்களும், வாலிபர்களும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்த விளையாட்டுக்கு அடிமையானவர்களை போலீசார் மீட்டு ஆலோசனை அளித்து வருகின்றனர்.

தாயை கொடுமைப்படுத்தும் மகன்
இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே புளூவேல் விளையாட்டால் தாயை மகன் கொடுமைப்படுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டம் கருப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜெயம்.

துன்புறுத்தும் பட்டதாரி மகன்
இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆவார். இவரது மகன் செந்தில். பட்டதாரியான இவர், தனது தாய் ஜெயத்தை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

புளூவேல் விளையாட்டின் கட்டளை
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து செந்திலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் புளுவேல் விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைப்படி அவர் தனது தாயை அடித்து துன்புறுத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புளூவேல் விளையாட்டுக்காக தாயை பெற்ற மகன் அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications