நெல்லை: மேலப்பாளையம் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றும் திட்டம் ரத்து!
நெல்லை: நாகர்கோவில் - மதுரை இடையே ரயில்பாதை இருவழிபாதை திட்டமாக அறிவிக்கப்பட்டதால் மேலப்பாளையம் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - நாகர்கோவில் வழி தடத்தில் மேலப்பாளையம், செங்குளம், நான்குநேரி, வள்ளியூர், பணக்குடி, ஆரல்வாய்மொழி, தோவாளை ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்றன.
இந்த வழித் தடத்தில் கிராசிங் ரயில் நிலையங்களாக தற்போது செங்குளம், வள்ளியூர், பணக்குடி, ஆரல்வாய்மொழி, நான்குநேரி ரயில் நிலையங்கள் உள்ளன. தற்போது 90 கி.மீ வேகத்தில் ரயில்கள் இந்த வழி தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

நேர விரயம் ஏற்படாது
இந்த வழித் தடத்தில் ரயில்கள் இயக்கம் நெருக்கடி தற்போது 110 சதவிகிதமாக உள்ளது. அதிக அளவில் புதிய ரயில்கள் இந்த தடம் வழியாக இயக்க வேண்டும் என்றால் புதிய கிராசிங் நிலையங்களை உருவாக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் கிராசிங்காக ரயில்கள் ஒரு சில ரயில் நிலையங்களில் அதிக அளவில் நிறுத்தி வைப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு கிராசிங் நிலையங்களை உருவாக்குவதால் பயணிகளுக்கு பயண நேரம் கணிசமான அளவில் குறையும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் பணக்குடி ரயில்நிலையம் கிராசிங் நிலையமாக மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

செங்குளத்தில் முதல் கிராசிங்
திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் மார்க்கம் பயணிக்கும் போது முதல் கிராசிங் நிலையமாக செங்குளம் ரயில் நிலையம் 14.74 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு வளைவுகள் மற்றும் தாமிரபரணி ஆற்றின் பாலம் அமைந்துள்ளதால் இந்த இரண்டு ரயில் நிலையத்துக்கு இடையே ரயில்கள் வேகம் குறைந்து இயக்கப்படுவதால் அதிக பயணநேரம் ஆகின்றது.

பயணிகள் எரிச்சல்
இதனால் கிராசிங் உள்ள நேரங்களில் ஒரு ரயில் மற்ற ரயில் கிராசிங்களை காட்டிலும் அதிக நேரம் கிராசிங்காக இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இது குமரி மாவட்ட பயணிகளை அதிக அளவில் எரிச்சலடைய செய்து வருகிறது. திருநெல்வேலியிருந்து 3.60 கி.மீ பகுதியை அதாவது தாமிரபரணி ஆற்றை கடந்து சிறிய தூரத்தில் மேலப்பாளையம் ரயில் நிலையம் உள்ளது. இதற்கு அடுத்ததாக செங்குளம் ரயில் நிலையம் 11.14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

கோரிக்கை
திருநெல்வேலியை அடுத்த முதல் ரயில் நிலையமான மேலப்பாளையம் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் ரயில்வேதுறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த நிலையத்தை 7.69 கோடிகள் செலவில் இரண்டு வழி இருப்புப்பாதைகள் கொண்ட கிராசிங் நிலையமாக மாற்ற திட்ட கருத்துரு ரயில்வே வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அறிவிப்பு
இதைத் தொடர்ந்து ரயில்வே வாரியம் மேலப்பாளையம் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்டதும் பல்வேறு கட்டங்களாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் ரயில் நிலையத்துக்கு புதிய நிலைய அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. இருப்புபாதைகள் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகள் மட்டுமே நிதி பற்றாகுறையால் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.

நாகர்கோயில் - மதுரை ரயில்பாதை
இந்த நிலையில் கடந்த 2015-16 ரயில் பட்ஜெட்டில் நாகர்கோவில் - மதுரை ரயில்பாதை இருவழிபாதையாக மாற்றம் திட்டம் செய்ய அறிவிக்கப்பட்டு இந்த திட்டத்தை ரயில் விகாஸ் நிறுவனம் ஏற்று ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறது.

புதிய கிராசிங் தேவையில்லை
நாகர்கோவில் - மதுரை ரயில்பாதை இருவழிப் பாதையாக மாற்றம் செய்வதால் புதிதாக கிராசிங் ரயில் நிலையம் தேவையில்லை என்று ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது. இவ்வாறு ரத்து செய்துள்ளதால் இருவழிப் பாதை பணிகள் முடியும் வரை திருநெல்வேலி அல்லது செங்குளம் ரயில் நிலையங்களில் குமரி மாவட்ட ரயில்கள் அதிக அளவு கிராசிங் பணிக்காக நிறுத்தி வைக்க வேண்டியது வரும்.

3 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம்
இவ்வாறு நிறுத்தி வைப்பதால் நெல்லை வரை விரைவாக வரும் ரயில்கள் திருவனந்தபுரம் கோட்ட எல்லைக்குள் வந்ததும் அதிக நேரம் நின்று குமரி மாவட்ட பயணிகளை எரிச்சலடைய செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த இருவழிப் பாதை பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை. பணிகள் துவங்கினால் முடிய சுமார் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம்.

70 சதவீதம் நிறைவு
இந்த பணிகள் முடியும்வரை ரயில்கள் இயக்கம் என்பது இந்த பகுதியில் அதிக நேரங்கள் கிராசிங் ஆக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கம். ஆகவே மேலப்பாளையம் ரயில் நிலைய கிராசிங் பணிகள் 70 சதமானம் முடிந்த நிலையில் உள்ளதால் இந்த பணிகளை தொடர்ந்து செய்யுமாறு குமரி மாட்ட ரயில் பணிகள் சங்கம் ரயில்வே துறையை கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு செய்தால் குமரி மாவட்டத்திற்கு செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயணநேரம் குறையும்.

அங்கு மட்டும் ரத்து இல்லை
மேலப்பாளையம் கிராசிங் பணிகள் திட்டத்துடன் துவங்கப்பட்ட நாகர்கோவில் - இரணியல் ரயில் நிலையம் இடையே உள்ள நாகர்கோவில் டவுண் ரயில் நிலைய கிராசிங் பணிகள் ரத்து செய்யப்படவில்லை. இந்த பகுதியும் இருவழிபாதையாக மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்கூடாக தெரிகிறது
குமரியிலிருந்து கேரளா மார்க்கம் செல்லும் ரயில்கள் காலதாமதமாக செல்லகூடாது என்று திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி இந்த பணிகளை செய்துவருகின்றனர். ஆனால் குமரியிலிருந்து தமிழகம் மார்க்கம் செல்லும் ரயில்கள் அதிக அளவு ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கிராசிங்காக நிறுத்தி நிறுத்தி செல்ல வேண்டும் என்று கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.

வாய்ப்புகள் பறிபோனது
இது மட்டுமில்லாமல் மேலப்பாளையம் ரயில் நிலையம் கிராசிங் ரயில் நிலையமாக மாற்றப்பட்டால் இருவழிபாதை பணிகள் முடியும் முன்பாகவே மூன்று முதல் ஐந்து புதிய ரயில்கள் இயக்கவசதி வாய்ப்புகள் இருந்தது. தற்போது இந்த வாய்ப்புகள் பறிபோய் உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications