தீக்குளித்து மரணமடைந்த இசக்கிமுத்து உடலை வாங்க மறுத்து மறியல்- 8 பேர் கைது
நெல்லை: நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்த இசக்கியின் தந்தை, தம்பி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கந்து வட்டி கொடுமை காரணமாக திங்கள் கிழமை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இசக்கிமுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நியாயம் கிடைக்காமல் சடலத்தை வாங்கப்போவதில்லை என்று உறவினர்கள் கூறினர்.
இசக்கிமுத்துவின் இறப்பு சான்றிதழில் கையெழுத்திட அவரது தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என தந்தை குற்றம்சாட்டினார்.
இதனிடையே இசக்கி முத்து ஆடம்பரமாக வாழவே கடன்வாங்கியதாக காவல்துறையினர் கூறவே
காவல்துறையைக் கண்டித்து மறியல் நடத்தினர். இதனையடுத்து இசக்கியின் தந்தை பலவேசம், தம்பி கோபி கைது செய்யப்பட்டனர். மேலும் சாலை மறியல் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications