இடிந்தகரையில் நேற்றும் நாட்டு வெடிகுண்டு வீச்சு - அதிரடி சோதனை நடத்த போலீசார் முடிவு!
நெல்லை: இடிந்தகரையில் 3வது நாளாக நேற்றும் நாட்டு வெடிகுண்ட்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரை ஊர் கமிட்டி தலைவர் அகஸ்டின். இவர் தலைமையிலான ஊர் கமிட்டியினர் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினருடன் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊர் கட்டுபாட்டை மீறியதாக கூறி சிலர் ஊர் கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இது தொடர்பாக இடிந்தகரையை சேர்ந்த கபூருக்கும், ஊர் கமிட்டியினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு இடிந்தகரையில் அடுத்தடுத்து 5 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
இதில் இடிந்தகரையில் இருந்த ஒரு வீட்டின் கதவு, ஜன்னல் சேதமடைந்தன. மேலும் இரு கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதை தொடர்ந்து வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அங்கு சமாதான கூட்டம் நடந்தது. இதில் மீனவர் சங்கத்தினர், ஊர் மக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் இடிந்தகரையில் உள்ள ஐஸ் பாக்டரி அருகே 3 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக கூடங்குளம் போலீசில் இடிந்தகரையை சேர்ந்த ஜேரோபியா, ஆனந்தி, ஜேரோணி, அந்தோணி உள்பட 5 பேர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக இரு கோஷ்டியை சேர்ந்த 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இடிந்தகரையில் மூன்றாவது நாளாக நேற்றும் குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கு மறுபடியும் பதற்றம் உருவாகியுள்ளது.
அடுத்தடுத்த ஏற்பட்ட குண்டு வெடிப்பை தொடர்ந்து எஸ்பி தலைமையில் அங்கு அதிரடி சோதனை போட போலீசார் தயாராகி வருகின்றனர். போலீசாரின் இந்த சோதனை முடிவு மேலும் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications