"செம் சயின்ஸ்" கண்காட்சி.. ராக்கெட் தயாரித்து அரசுப் பள்ளி மாணவர்கள் செம சாதனை!
நெல்லை: நெல்லை மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறன் மற்றும் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் "செம் சயின்ஸ்" என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி பாளை காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் கருணாகரன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் மற்றும் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

கண்காட்சியில் திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காளிஅரசன், கணேசன் மற்றும் 9ம் வகுப்பு மாணவர் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து ஹைட்ரோ ஏர் ராக்கெட் மாதிரி தயாரித்து வைத்திருந்தனர்.
இந்த ராக்கெட்டை 30 மீட்டர் உயரத்தில் கயிறு கட்டி அதில் இணைத்து பறக்கவிட்டனர். இது குறித்து, மாணவர்கள், "இந்த மாதிரி ராக்கெட், சிறிய குளிர்பான பாட்டிலை பயன்படுத்தி வடிவமைத்துள்ளோம். பாதி அளவு தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலில் சைக்கிளுக்கு காற்றடிக்க பயன்படுத்தப்படும் பம்ப் மூலம் காற்றை செலுத்தி பின்னர் கயிற்றில் இணைத்து 30 மீட்டர் உயரத்திற்கு ராக்கெட் இயக்கப்பட்டுள்ளது. இதே ராக்கெட்டை காற்று, மற்றும் நீரால் அழுத்தப்பட்டு சுமார் 300 மீட்டர் உயரத்திற்கு (5 மாடி கட்டிட உயரம்) பறக்கவிட முடியும்.
நாங்கள் இதே ராக்கெட்டை ஏற்கனவே மற்றொரு பள்ளி கண்காட்சியில் பறக்க செய்து முதல் பரிசு பெற்றுள்ளோம்" என பெருமையுடன் கூறினர். தனியார் பள்ளிகள் அனுமதிக்காக கோடி கணக்கில் பணம் வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் தற்போதூ சாதித்து வருவது பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications