ப்ளஸ் டூக்கு 200 மார்க் அது கூட தெரியல அமைச்சருக்கு... கலாய்க்கும் நெட்டிசன்கள் !
சென்னை: ப்ளஸ் டூக்கு 200 மார்க் அது கூட அதிமுக அமைச்சருக்கு தெரியலயா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்
தமிழகம், புதுச்சேரியில் ப்ளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. தேர்வையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் ப்ளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு வாழத்துத் தெரிவிக்கும் விதமாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெயரில் அவரது தொகுதியான திருமங்கலத்தில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
அதில், இன்று தொடங்குகின்ற +2 பொதுத் தேர்வை எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் அனைத்து பாடப்பிரிவுகளிலும் 100/100 மதிப்பெண்களோடு வெற்றி பெற்று ஒளிமயமான எதிர்காலத்தினை பெற்றிட வாழ்த்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பில் 100/100 மதிப்பெண் எப்படி? 200/200 என்று தான் மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது இந்த போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ப்ளஸ் டூக்கு 200 மார்க் அது கூட தெரியல அமைச்சருக்கு என வறுத்தெடுத்து வருகின்றனர்.இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications