பகுத்தறிவு பகலவனே எழுந்து வா! கருணாநிதி நலம் பெற வேண்டி தொண்டர்கள் உருக்கம்! #கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என அக்கட்சியினர் காத்திருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதிக்காக உணர்ச்சிகரமாக காத்திருக்கும் தொண்டர்கள்- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி அக்கட்சியினர் காத்திருக்கின்றனர். சமூக வலைதளங்களிலும் அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக கோபாலபுரம் வீட்டிலேயே அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவரது உடல் நிலை மோசமானது.

    இதையடுத்து அவர் உடனடியாக காவிரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    டிவிட்டரில் உருக்கம்

    டிவிட்டரில் உருக்கம்

    இந்நிலையில் கருணாநிதி நலம் பெற வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் டிவிட்டரில் உருக்கமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..

    இது சாதனையல்ல சரித்திரம்!

    50 ஆண்டுகள் ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவர்!
    இது சாதனையல்ல சரித்திரம்!

    ஒழித்து சமூக ஒற்றுமை

    மதவாத சக்திகளுக்கு இடம்
    கொடுக்காமல் நல்ல மனங்களில்
    வாழ்கின்ற தலைவன் நீ!
    சாதி பேதங்களை ஒழித்து சமூக
    ஒற்றுமைக்கு வித்திட்ட தலைவன் நீ!

    உண்மை தலைவர் வாழ்கவே

    கல்லக்குடி கொண்ட
    கருணாநிதி வாழ்கவே!
    மக்கள் உள்ளக்குடி கொண்ட
    உண்மை தலைவர் வாழ்கவே!.

    தொண்டர்கள் வைத்துள்ள பாசம்..

    ஒருபுறம் எமனின் கையில் உள்ள 'பாசம்'
    மறுபுறம் தொண்டர்கள் வைத்துள்ள பாசம்..
    ''மிஸ்டர் எமன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்''

    கருணாநிதி இல்லையேல்

    தலைவர் கருணாநிதி இல்லையேல் தமிழ் மொழியும் தமிழ் நாடும் இவ்வளவு செழுமையாக இருக்க வாய்ப்பில்லை
    நலமுடன் திரும்ப வாருங்கள் தலைவா

    ஆதவன் மறைவதில்லை

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை

    மனம் உன்னை சுற்றியே

    இரவு முழுவதும் உனக்காக, நீ நன்றாக இருக்கிறாய் என்னும் வார்த்தை கேட்க காத்திருந்து, தற்போது நீ நலமாய் இருக்கிறாய் என்று அறிந்து, என் உடல் மட்டும் வீட்டிற்கு செல்கிறது, என் மனம் உன்னை சுற்றியே இருக்கும்..

    பகுத்தறிவு பகலவனே..

    முழுநேர அரசியல் ஈடுபாடு கடந்து தற்போது சூழலில் தாங்கள் நலமாக உள்ளீர்கள் என்பதே தமிழர்களான எங்களுக்கு ஆகச்சிறந்த பலமாகும். பகுத்தறிவு பகலவனே எழுந்து வா! வையகம் தமிழையும் தமிழனையும் போற்ற வழிநடத்து.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+