மோடியின் "சீறிய" முயற்சியால் அவசர சட்டமாம்... நெட்டிசன்களிடம் வாங்கி கட்டும் தமிழக பாஜக!

மோடியின் "சீறிய" முயற்சியால் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்றப்பட்டதாக கூறி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறது தமிழக பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த பிறப்பிக்கப்பட்ட அவரச சட்டத்தை மக்கள் நிராகரித்து வருகின்றனர்; ஆனால் தமிழக பாரதிய ஜனதாவோ உடனே 'மோடியின் சீரிய முயற்சியாலும்' அவசர சட்டம் இயற்றியதற்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட இப்போது நெட்டிசன்களிடம் வறுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கான ஒரு வார காலமாக பல லட்சம் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். இந்த போராட்ட பெருநெருப்பை தணிக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

Netizens slam TN BJP on Jallikattu ordinance

இதன் மூலம் தமிழகத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போர்க்களத்தில் இருக்கும் மக்களோ இதை நிராகரித்துவிட்டனர்.

இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அறவழிப் போராட்டத்தாலும் பாரத பிரதமர் அவர்களின் "சீறிய" முயற்சியால் (சீரிய என்பதே சரி) ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றியதற்கு நன்றி! நன்றி! என பதிவிடப்பட்டுள்ளது.

இப்படி ஒரு ட்விட்டர் பதிவு போடப்பட்டதுதான் தாமதம்! நெட்டிசன்கள் பொங்கி எழுந்து பாஜகவை என்னென்ன வார்த்தைகளால் விமர்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் வறுத்து கருகவிடுகின்றனர்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+