வாழ்நாள் முழுவதும் நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடவுள் 'ஆசிரியர்கள் !
சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தங்கள் வாழ்வில் விளக்கேற்றிய ஆசிரியர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
நன்றிக்கடன்
வாழ்நாள் முழுவதும் நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடவுள் 'ஆசிரியர்கள் !
|
சிரந்தாழ்ந்த நன்றிகள்
எனது வாழ்க்கையில் சிறந்த ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள்.. பலரும் என் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தவர்கள்..
அத்தனை பேருக்கும் எனது சிரந்தாழ்ந்த நன்றிகள்.
|
எழுத்தறிவித்தவன் இறைவன்
"எழுத்தறிவித்தவன் இறைவன்"
ஆசிரியர்கள் அனைவருக்கும்
#ஆசிரியர்தினம் வாழ்த்துக்கள்...
|
பிறருக்கு வெளிச்சம்
மெழுகுவர்த்தியாக இருந்து மாணவர்களுக்கு தன்னை அழித்து பிறருக்கு வெளிச்சம் (அறிவை) தரும் ...
ஆசிரியர் பெரு மக்களுக்கு
|
நண்பனை போல்
நான் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்று அக்கறையோடும்
அன்போடும் நண்பனைபோலும்
பெற்றோர்போலும்
என்னை ஊக்கப்படுத்தி
என் கனவை அவர்கள் கனவாக்கிக்கொண்ட
ஆசிரியர்களுக்கு
இந்த உயர்ந்த தருணத்தில்
அவர்களின் ஆசி பெற்றே வாழ்த்துக்கள் சொல்லி
வணங்குகிறேன்.
|
ஆசிரியர் பணியே அறப்பணி
"ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி " என்ற வாக்கினை வாழ்க்கையாக கொண்டு , எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கும் சிற்பங்களான மாணவர்களை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்


Click it and Unblock the Notifications
